தமிழகத்திற்கு ரூ.335 கோடி ஒதுக்கீடு – வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு நடவடிக்கை!!

0
Central Govt
Central Govt

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டு உள்ள வருவாய் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் 14 மாநிலங்களுக்கு 6,195.08 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கொரோனா காலத்தில் ஏற்பட்டு உள்ள நெருக்கடியில் இது உதவிகரமாக இருக்கும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நிதி ஒதுக்கீடு:

கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கட்டு உள்ள ஊரடங்கு உத்தரவு, நாட்டின் பொருளதாரத்தில் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி உள்ளது. நடப்பு காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் (GDP) மைனஸ் 23.9% ஆக சரிந்தது. இதனால் தொழில்துறைகள் மீண்டும் பழைய உத்வேகத்தில் இயங்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளது. கொரோனா காலத்தில் மாநிலங்களின் வருவாய் இழப்பிற்கு முக்கிய காரணம், வரி வசூல் குறைந்ததே. இதனால் பல மாநிலங்கள் போதுமான அளவு பணம் இல்லாததால் அரசு ஊழியர்கள், எம்எல்ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்தன.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Union Finance Minister Nirmala Sitharaman 

இந்நிலையில் மாநிலங்களுக்கு ஏற்பட்டு உள்ள வருவாய் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் மத்திய நிதி அமைச்சகம் 15வது நிதி ஆணையம் பரிந்துரையின் படி, ஆறாவது மாதத் தவணையாக 14 மாநிலங்களுக்கு 6,195.08 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இரு தவணைகளாக மாநிலங்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவிற்கு 1,276.91 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்திற்கு ரூ. 335.41 கோடியும், ஆந்திராவிற்கு ரூ. 491.66 கோடியும், பஞ்சாப்பிற்கு ரூ.638.25 கோடி, அசாமிற்கு ரூ. 631.58 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் மேற்கு வங்கத்திற்கு ரூ.417.75 கோடி, ஹிமாச்சல் பிரதேசத்திற்கு ரூ. 952.58 கோடியும், மணிப்பூா் மாநிலத்திற்கு ரூ. 235.33 கோடியும், மிசோரத்திற்கு ரூ. 118.50 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here