Home பொழுதுபோக்கு சினிமா அந்த குரலை இனிமேல் கேட்க முடியாதா?? பாலாஜியின் நினைவுகளை பகிரும் டிடி!!

அந்த குரலை இனிமேல் கேட்க முடியாதா?? பாலாஜியின் நினைவுகளை பகிரும் டிடி!!

0
அந்த குரலை இனிமேல் கேட்க முடியாதா?? பாலாஜியின் நினைவுகளை பகிரும் டிடி!!
dd and balaji

நகைச்சுவை நடிகரான வடிவேல் பாலாஜி உடல்நலக் குறைவால் இறந்த செய்தி சின்னத்திரையில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தற்போது விஜய் டிவி தொகுப்பாளினி டிடி வடிவேல் பாலாஜி பற்றிய நினைவுகளை சமூக வலைத்தளங்களில் கண்ணீருடன் பகிர்ந்து வருகிறார்.

வடிவேல் பாலாஜி:

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட வடிவேல் பாலாஜி சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் உடல்நலக் குறைவால் இறந்த சம்பவம் சக கலைஞர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. இந்த இளம் வயதில் இவரது இறப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது டிடி அவரின் சில நினைவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

dd and balaji
dd and balaji

அவர் கூறியதாவது, வடிவேல் பாலாஜியுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். அதை பற்றி பேச பின்னோக்கி செல்ல வேண்டும். அவர் ஒரு மகிழ்ச்சியான மனிதர். அவருடன் பேச நான் எப்பொழுதும் விருப்பப்படுவேன். அவருடன் சேர்ந்து நிகழ்ச்சியினை வழங்கும்போது எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கும். நிகழ்ச்சி தொடங்கும் முன் தயாராக மாட்டார்.

ஜில்லுனு ஒரு காதல் படத்தை தவறவிட்ட அசின் – இப்போ புலம்பி என்ன பிரயோஜனம்!!

vadivel balaji
vadivel balaji

நாம பார்த்துக்கலாம் என்று கூறுவார். பல நடிகர்களை போல பேசுவதில் பாலாஜி தான் முன்னோடி. வாய்ஸ் நோட்ஸ் மூலம் அடிக்கடி பேசிக்கொள்வோம். ஜூலை வரையில் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். ஆனால் அவரின் இந்த மறைவு அதிர்ச்சியாக உள்ளது. இளம் வயதில் இப்படி சென்றுவிட்டார். இனிமேல் அவரின் குரலை கேட்க முடியாது என்பது மனதை கணக்க வைக்கிறது என பதிவிட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here