தண்ணி காட்டும் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!!

0
Gold
Gold

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவி வருகிறது. கடந்த 2 நாட்களாக உயர்ந்து வந்த விலை இன்று மீண்டும் சரிந்துள்ளது. இதனால் நகைக்கடைகளில் வியாபாரம் சற்று சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

இன்றைய விலை:

கொரோனா பாதிப்பு காரணமாக தொழில் துறைகளில் ஏற்பட்ட சரிவு பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. இதனால் பல பங்குகளின் விலை சரியத் தொடங்கியதால் பாதுகாப்பான முதலீடுகள் மீது முதலீட்டாளர்கள் கவனம் திரும்பியது. ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் போன்றவற்றில் இருந்த முதலீடுகள் பல தங்கத்தின் மீது குவியத் தொடங்கியது. இதனால் அதன் தேவை அதிகரித்து விலையும் கிடுகிடுவென அதிகரித்தது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Gold
Gold

தமிழகத்திற்கு ரூ.335 கோடி ஒதுக்கீடு – வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு நடவடிக்கை!!

கடந்த மாதம் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் வரலாறு காணாத அளவு 43 ஆயிரம் ரூபாயை தாண்டியது. செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே விலை சிறிது சிறிதாக சரியத் தொடங்கியது. இன்று சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கம் ரூ.22 சரிந்து ரூ.4,898க்கும், ஒரு சவரன் 176 ரூபாய் குறைந்து ரூ.39,184க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் பெரிதளவு மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.69.80 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 69,800 ரூபாயாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here