நிதிதிரட்ட இப்படி இறங்கிட்டீங்களே மோடி – அவதியில் பயணிகள்??

0

நாட்டில் உள்ள பல விமான நிலையங்களின் பங்குகளை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி திரட்டுவதற்கான முன் முயற்சியாக இது உள்ளது என்று அரசு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசு திட்டம்

நாட்டில் ஏற்கனவே மத்திய அரசு புது டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களின் பங்குகளை மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரும் 2021 – 2022 ஆம் நிதியாண்டில் 13 விமான நிலையங்கள் தனியார் மயமாக்க திட்டமிட்டிருந்த நிலையில் மேலும் 4 விமான நிலையங்களின் அரசுத்துறை பங்குகளை விற்க அரசு முடிவு செய்துள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய காருடன் “பாரதி கண்ணம்மா” சீரியல் பிரபலம் – வைரலாகும் புகைப்படம்!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விமான நிலைய ஆணையத்தின் தனியார் மயமாக்கும் முதல் கட்ட முயற்சியாக 13 விமான நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் 4 விமான நிலையங்களின் பங்குகளையும் விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே போல் லாபமற்று செயல்பட்டு வரும் விமான நிலையங்களை இணைப்பதற்கான முயற்சிகளும் ஆராயப்படும் என்று தெரிவிக்கப்படும். தற்போது இந்தியாவில் உள்ள மும்பை பன்னாட்டு விமான நிலையத்தின் 74 சதவீத பங்குகளை அதானி நிறுவனம் வைத்துள்ளது, அதே போல் மீதம் உள்ள 26 சதவீத பங்குகளை ஏர் இந்தியா நிறுவனம் வைத்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த மத்திய பட்ஜெட்டின் போது மத்திய நிதித்துறை அமைச்சர் பட்ஜெட் தாக்கலின் போது புதிய கட்டுமானங்களை செய்வதற்காக பொதுத்துறை சொத்துக்களில் இருந்து நிதி திரட்டப்படும் என்று தெரிவிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படியாக அனைத்தும் தனியார்மயமாக்கப்படுவதால் விமான போக்குவரத்திற்கான கட்டணங்கள் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here