‘ஒத்த செருப்பு’ மற்றும் ‘ஹவுஸ் ஓனர்’ திரைப்படங்களுக்கு மத்திய அரசு விருது!!

0

இந்திய திரையுலகில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மொழிகளில் சிறந்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து மத்திய அரசு விருதுகளை வழங்கும். அந்த வகையில் 2020ம் வருடத்திற்கான பட்டியலில் பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படமும், லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஹவுஸ் ஓனர் திரைப்படமும் இடம் பெற்றுள்ளது.

மத்திய அரசு விருது

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சிறந்த இயக்குனர், திரைப்படம் போன்ற பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவிப்பது வழக்கம். அனைத்து மொழி திரைப்படங்களிலும் சிறந்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து மத்திய அரசு விருதுகளை வழங்கும். அந்த வகையில் தற்போது தமிழில் ‘ஒத்த செருப்பு’ மற்றும் ‘ஹவுஸ் ஓனர்’ திரைப்படம் தேர்வாகி உள்ளது.

oththa-seruppu-size-7
oththa-seruppu-size-7

ஒத்த செருப்பு திரைப்படம் மாறுபட்ட கதைக்களத்துடன் பார்த்திபன் இயக்கி இருப்பார். மேலும் ஒரே கதாபாத்திரம் படத்தில் அனைத்து காட்சிகளிலும் இடம் பெரும் வகையில் காட்டப்பட்டிருக்கும். இதனால் மக்கள் பலரும் அவரின் புதிய விதமான திறமையை பாராட்டினர்.

house-owner

மேலும் இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் இடம் பெறாவிட்டாலும் விருது வாங்கும் அளவிற்கு சென்றுள்ளது. மேலும் ஹவுஸ் ஓனர் திரைப்படமும் சென்னை வெள்ளத்தில் ஒரு வயதான தம்பதிகளின் பாசத்தை மையமாக வைத்து இயக்கப்பட்டதே ஆகும்.

இந்த புது விதமான முயற்சிக்காக லட்சுமி ராமகிருஷ்ணனை பலரும் பாராட்டி வந்தனர். மத்திய அரசு வழங்கும் இந்த மொழி சார்ந்த விருது வழங்கும் விழாவில் 2019 கான சிறந்த தமிழ் திரைப்படமாக இந்த இரண்டு படங்களும் தேர்வாகியுள்ளது பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here