Thursday, April 18, 2024

நவ.1 முதல் அரசு இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடக்கம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

Must Read

அடுத்த ஆண்டில் நடக்கவிருக்கும் நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அரசு சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி துவங்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுகள்:

இந்த ஆண்டு கொரோனா பரவலையும் தாண்டி தேசிய அளவில் பல எதிர்ப்புகளுடன் நீட் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வினை 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எழுதினர். இந்த தேர்வுகளில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து போராடி வருகின்றது. மேலும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்காக அரசு சார்பில் இலவச நீட் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

கடந்த ஆண்டு நீட் இலவச பயிற்சி இ-பாக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலமாக வழங்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்புகளில் அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு படித்தனர். அவர்களில், இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதனை அடுத்து அடுத்த ஆண்டிற்கான நீட் இலவச பயிற்சிகள் துவங்க உள்ளன. இந்த ஆண்டும் நீட் பயிற்சியினை இ-பாக்ஸ் நிறுவனமே நடத்த உள்ளது.

அறிக்கை மூலம் தகவல்:

இந்த பயிற்சி வகுப்புகள் நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக தான் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் ஒரு சுற்றறிக்கையினை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ளார்.

அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை – பொதுமக்கள் ஷாக்!!

அதில் கூறப்பட்டிருப்பதாவது, “நீட் தேர்வு பயிற்சிகள் நவம்பர் மாதத்தில் இருந்து துவங்க உள்ளது. மாணவர்கள் இந்த பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க ஊக்குவிக்கப்பட வேண்டும். இந்த பயிற்சிகளில் சேர விரும்பும் மாணவர்கள் அவர்களது பெயர், முகவரி, மற்றும் இதர தகவல்களை பெற்று பள்ளிக்கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். நீட் பயிற்சி வகுப்புகள் வெற்றிகரமாக நடத்தபட வேண்டும்” இவ்வாறாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் இந்த வாக்காளர்களுக்கு இலவச வாகன வசதி., போன் பண்ணா Pickup Drop? தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும், நாளை (ஏப்ரல் 19) காலை முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர்....
- Advertisement -

More Articles Like This

- Advertisement -