Saturday, September 24, 2022

செய்திகள்

ஆபரணத் தங்கத்தின் விலை விறுவிறு உயர்வு – இன்றைய நிலவரம்

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 31,000 ஐ தாண்டியுள்ளது.  இந்த புத்தாண்டு தொடங்கியதில் இருந்து நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே உள்ளது.  சர்வதேச சந்தையின் நிலவரத்திற்கேற்ப ஒவ்வொரு நாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை இன்று, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.512 உயர்ந்து ரூ.31,168-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 64 உயர்ந்து ரூ. 3,896 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை இன்று, சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.30 உயர்ந்து ரூ.52.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.  நேற்று 51 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.52,300 ஆக இருக்கிறது.

பரவும் காட்டு தீ பலியாகும் காட்டு விலங்குகள் | அமேசான்க்கு அடுத்து ஆஸ்திரேலியநாடுகள்

பரவும் காட்டு தீ பலியாகும் காட்டு விலங்குகள் - அமேசான்க்கு அடுத்து ஆஸ்திரேலியநாடுகள் https://youtu.be/AyENQ9Lh1bQ

தல பட ஷூட்டிங் – தர்பாருக்காக வெயிட்டிங் (சென்னையில் இன்று கனமழை)

விடுமுறைகள் முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறந்துவிட்டன.  இனி அனைவரும் அடுத்து சில நாட்களில் வரவிருக்கும் பொங்கல் விடுமுறைக்காக காத்திருக்க வேண்டியது தான்.  இந்நிலையில் இன்று தமிழகம் மற்றும் இந்தியாவில் நடக்கவுள்ள, நடந்த சில விஷயங்களை காண்போம். சட்டசபை கூட்டத்தொடர்:      தமிழக சட்டசபைக்கான கூட்டத்தொடர் இன்று தொடங்க இருக்கிறது.  முதல் நாள் ஆன இன்று சபாநாயகர் அவர்கள் உரை நிகழ்த்துவது வழக்கம்.  இன்று நடக்கவிருக்கும் கூட்டத்தொடரில் மேலும் 3 புதிய மாவட்டங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்மிகம்:      வைகுண்ட ஏகதேசியான இன்று வைணவ கோயில்களில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. திருச்சி ஸ்ரீரங்கம், திருப்பதி ஏழுமலையான் உள்ளிட்ட கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னையில் மழை:      சென்னையில் நேற்று மாலை முதல் மேகமூட்டமாக காணப்பட்டது.  இந்நிலையில் இன்று காலை பல இடங்களில் மலை பெய்துள்ளது.  மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டில்லி பல்கலைகழக தாக்குதல்:      டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் மர்மநபர்கள் கொலைவெறித்தாக்குதலை நடத்தியுள்ளனர். இதற்கு பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளனர். தல பட ஷூட்டிங் - தர்பாருக்காக வெயிட்டிங்:      நடிகர் அஜித்குமார் தனது அடுத்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்...

குரூப் 4 தேர்வில் முறைகேடா? தேர்வர்கள் புகார்:

கடந்த 2019 செப்டம்பர் 1 அன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.  இந்த தேர்வை மொத்தம் 3000 தேர்வு மையங்களில் 16 லட்சத்து 855 பேர் எழுதினார்.  இந்நிலையில் இதற்கான முடிவுகள் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டன.  இதற்கான தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டது. ஒரே இடத்தைச் சேர்ந்தவர்கள் முன்னிடம், தரவரிசை பட்டியலை ஆய்வு செய்த போது முதல் 100 இடங்களை பிடித்தவர்கள் ராமநாதபுரம் மாவட்டம்,  ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என கூறப்படுகிறது.  இது தேர்வு எழுதியவர்கள் மத்தியில் அதிர்ச்சியை...

மீண்டும் ஜாவா ரைய்டுக்கு ரெடியா Jawa Perak Bookings open

மீண்டும் ஜாவா ரைய்டுக்கு ரெடியா || Jawa Perak Bookings open https://youtu.be/OLDiXuHR4u4

மூன்றாம் உலகப்போர் அபாயம் – டுவிட்டரில் ட்ரெண்டிங்

அமெரிக்கா - ஈரான் ஆகிய நாடுகள் இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில் ட்விட்டரில் மூன்றாம் உலகப்போர் குறித்த அபாயத்தையும், அதுதொடர்பான மீம்ஸ்களையும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். அமெரிக்கா - ஈரான் தாக்குதல்: ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது கடந்த வாரம் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா படையினர் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக அப்படையினர் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அதன் ஈராக்கின் பாக்தாத் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஹிஸ்புல்லா படையினர் சூறையாடினர். இந்த தாக்குதல்களுக்கான தண்டனையை ஈரான் எதிர்கொள்ளும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். அத்துடன் மத்திய-கிழக்கு பகுதியில் 750 வீரர்களை நிலைநிறுத்தவும் ட்ரம்ப் உத்தரவிட்டார். ஈரான் படைத்தளபதி கொலை: அமெரிக்க ராணுவம் ஆள் இல்லா விமானம் மூலம் இன்று அதிகாலை பாக்தாத் விமானநிலையம் அருகே நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் கீழ் இயங்கும் ஈரான் புரட்சிகர காவலர்கள் படையின் பிரிவான ஈரான் எலைட் குட்ஸ் படைத் தலைவர் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. டுவிட்டரில் ட்ரெண்டிங்: இந்நிலையில், ட்விட்டரில் World War 3 ஹேஷ்டேக் உலக ட்ரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.  இது உலக நாடுகளிடையே பதற்றத்தை உண்டாக்கி உள்ளது.

2010- 2019 உலக அளவில் நடந்தமறக்கமுடியாத நிகழ்வுகள் Decade of the World

2010- 2019 உலக அளவில் நடத்தமறக்கமுடியாத நிகழ்வுகள் Decade of the World https://youtu.be/VFo5I0s-pic

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் பெட்ரோல் விலை இன்று 11 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 78.39 காசுகள் ஆகவும், டீசல் விலை 16 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 72.28 காசுகள் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு விநியோகம் – தேதி அறிவிப்பு

தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் காரணமாக 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  தற்போது தேர்தல் முடிந்து முடிவுகள் வெளிவந்த நிலையில் மீண்டும் பொங்கல் பரிசு விநியோகம் துவங்கப்படவுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பானது, ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதையடுத்து, தேர்தல் நடந்த 27 மாவட்டங்களில் தேர்தல் ஆணையம் தேர்தல் விதிமுறைகளை அமல் படுத்தியிருந்தது. அதன்படி, ரேஷன் கடைகள் மூலம் தமிழக அரசு வழங்கவிருந்த பொங்கல் பரிசு தேர்தல் விதிமுறை விலக்கிக் கொள்ளப்பட்ட பின் விநியோகிக்கப்படும் எனக்...

தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொது தேர்வு கால அட்டவணை வெளியீடு – 2020

ஏப்ரல் 2020 இல் நடைபெறவிருக்கும் தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொது தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்கம் அரசாணை ஒன்றினை 03.01.2020 அன்று வெளியிட்டுள்ளது.  அதில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் பின்வருமாறு, தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொது தேர்வு வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கவுள்ளது.  இதற்கு விண்ணப்பித்தற்கான ஆன்லைன் முறைகளையும், தேர்வுக்கால அட்டவணையும் அனைத்து  முதன்மை கல்வி அலுவலர்களும், அனைத்து அரசு தேர்வுகள் மாவட்ட உதவி இயக்குனர்கள் அந்தந்த வட்டாரத்திற்குட்பட்ட செய்தித் தாள்களில் வெளியிடவும் மற்றும் மாணவர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுத் தேர்வுத்துறை தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு கால அட்டவணை  ஏப்ரல் 2020 நாள் பாடம் நேரம் ...
- Advertisement -

Latest News

இந்தியாவில் 200 கோடியை தாண்டிய தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை – சுகாதாரத்துறை ரிப்போர்ட்!!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி இதுவரை செலுத்தியவர்களின் எண்ணிக்கை குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி: கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாவின் கோர தாண்டவத்தில் இருந்து...
- Advertisement -