Paytm மூலம் பேருந்து கட்டணம் – அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தகவல்..!

0
minister mr vijayabaskar
minister mr vijayabaskar

தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் Paytm மூலம் கட்டணம் செலுத்தும் வசதி சோதனை முயற்சியாக தொடங்கப்பட்டு உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

பேருந்து சேவை:

தமிழகத்தில் 68 நாட்களுக்குப் பிறகு இன்று பேருந்து சேவை 4 மாவட்டங்களைத் தவிர்த்து தொடங்கப்பட்டு உள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் காலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் மக்களின் தேவைக்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்படும் என தெரிவித்தார். அரசுப் பேருந்துகளில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படுவதாக கூறிய அமைச்சர் நாளை முதல் கன்னியாகுமரியில் பேருந்து சேவை தொடங்கும் என கூறியுள்ளார்.

இதற்காக பேருந்து நிறுத்தத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த மார்க்கெட்டை இடம்மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். அரசுப் பேருந்து ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படவில்லை மேலும் பரிசோதனை முயற்சியாக 2 பேருந்துகளில் Paytm வாயிலாக கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. பேருந்து பயணிகளிடம் முடிந்தவரை மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here