அமெரிக்காவில் கறுப்பினர் கொலை – 25 நகரங்களில் பற்றி எரியும் போராட்டம்..!

0

அமெரிக்காவில் கறுப்பின நபர் கொலை செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு ஆதரவாக 25 நகரங்களுக்கு கலவரம் பரவி உள்ளது.

அமெரிக்கா

அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட கருப்பின நபருக்கு ஆதரவாக நியூயார்க் முதல் லாஸ் ஏஞ்சல்ஸ் வரை முக்கியமான 25 நகரங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Minneapolis Police Station Set Ablaze As Protests Spread Over ...

பெரும்பாலான நகரங்களில் ஆர்ப்பாட்டம் கலவரமாக வெடித்துள்ளதுடன், போலீஸ் வாகனங்கள், கட்டிடங்கள் என ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. கலவரங்களை கட்டுப்படுத்த இந்த நகரங்களில் ஊரடங்கு அமுலுக்கு கொண்டுவந்துள்ளதுடன், ராணுவமும் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கலவரம்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1992 ஆம் ஆண்டு இதேபோன்ற ஒரு கலவரத்திற்கு பின்னர் தற்போது தேசிய பாதுகாப்பு படையினரை களமிறக்கியுள்ளனர்.மட்டுமின்றி மாகாண ஆளுநர் கலவரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அவசர நிலையை பிரகடப்படுத்தியுள்ளார்.

Protests over George Floyd escalate near White House as Trump ...

மொத்தம் 11 மாகாணங்களும், கொலம்பியா மாவட்டமும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலைக்குள் தேசிய பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

George Floyd riots LIVE updates: Minneapolis unrest extended to ...

ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் தேசிய பாதுகாப்பு படையினரின் உதவிக்கு அழைப்பு விடுக்கும் மாகாணங்களில் கலிபோர்னியா, ஜார்ஜியா, மினசோட்டா, மிசோரி, நெவாடா, ஓஹியோ, டென்னசி, டெக்சாஸ், உட்டா மற்றும் வாஷிங்டன் மாகாணமும் அடங்கும்.இதனிடையே உத்தரவு பிறப்பிக்கப்படும் 4 மணி நேரத்தில் ராணுவம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் வகையில் தயார் நிலையில் இருக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here