‘உலகில் அதிக அளவு மக்களை மார்பக புற்றுநோய் பாதித்துள்ளது’ – உலக சுகாதார அமைப்பு தகவல்!!

0

உலக அளவில் மக்களை அதிக அளவில் மார்பக புற்றுநோய் பாதித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் மருத்துவ நிபுணர் ஆந்த்ரே இல்பாவி தெரிவித்துள்ளார். அவர் இதை பற்றி மேலும் பல தகவல்களை தெரிவித்துள்ளார்.

புற்றுநோய்:

உலக அளவில் கொடிய விதமாக பாதிக்கும் நோய்களில் ஒன்று தான் புற்றுநோய். ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் 4ம் தேதி அன்று சர்வதேச புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தற்போது நாளை சர்வதேச புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படவுள்ளது. இந்நிலையில் இதனை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு நிபுணர் ஆந்த்ரே இல்பாவி பேசியுள்ளார். அவர் கூறியதாவது தற்போது 1 ஆண்டுக்கு 93 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் வரும் காலத்தில் அதாவது வருகிற 2040ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 3 கோடியாக அதிகரிக்கும் என்று அதிர்ச்சியான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். மேலும் இந்த கொரோனா காலத்தில் புற்றுநோய்க்கு சரியான முறையில் சிகிச்சை கிடைப்பதில்லை என்று வருந்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் கடந்த 20 ஆண்டுகளில் உலக மக்கள் அதிகமாக நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆந்த்ரே இல்பாவி தெரிவித்துள்ளார். ஆனால் தற்போதைய காலங்களில் நுரையீரல் புற்றுநோயை விட மார்பக புற்றுநோய் சற்று அதிகமாக பரவி வருகிறதாம்.

மார்பக புற்றுநோய்:

பெண்களின் உடல் பருமன் பிரச்சனைகள் அதிகரிப்பதே இந்த மார்பக புற்றுநோய் வேகமாக பரவுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது என்று ஆந்த்ரே இல்பாவி தெரிவித்துள்ளார். மேலும் மது அருந்துதல், காய்கறிகள் உண்ணாமல் இருத்தல், உடல் பயிற்சி மேற்கொள்ளாமல் இருத்தல், புகையிலை பயன்பாடு போன்ற காரணத்தினால் புற்றுநோய் உண்டாகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

டெல்லி விவசாயிகள் போராட்டம் – கங்கனா ரனாவத் காரசார ட்வீட்!!

தற்போது மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் இந்த வரிசையில் புதிதாக மலக்குடல் புற்றுநோயும் சேர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மலக்குடல் புற்றுநோய் தற்போது வேகமாக பரவ தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here