டெல்லி விவசாயிகள் போராட்டம் – கங்கனா ரனாவத் காரசார ட்வீட்!!

0

டெல்லியில் தற்போது விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை முன்னிட்டு அங்கு இணைய சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா பாப் பாடகி ரிஹானா இதனை சுட்டிக்காட்டி ட்வீட் செய்துள்ளார். அதற்கு பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடுமையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம்:

மத்திய அரசு அறிவித்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் சுமார் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர். மேலும் கடந்த குடியரசு தின விழாவில் போராட்டம் வெடித்தது. இதில் 100கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் போலீசார் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் 100கும் அதிகமான விவசாயிகளை அதிரடியாக கைது செய்தனர். தற்போது விவசாயிகள் அடுத்தகட்ட போராட்டமாக வரும் 6ம் தேதி அன்று தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த போராட்டத்திற்கு விவசாயிகள் அதிகமாக பங்கு பெறக்கூடாது என்று கூறி டெல்லி எல்லையில் அதிக அளவில் தடுப்புகளை போலீசார் வைத்துள்ளனர். மேலும் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் பல கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். மேலும் கலவரங்களை கட்டுப்படுத்தும் வகையில் டெல்லியில் இணைய சேவை தடை செய்யப்பட்டது.

கங்கனா ரனாவத் காரசார ட்வீட்:

இதனை சுட்டிக்காட்டி அமெரிக்கா பாப் பாடகி ரிஹானா தனது ட்விட்டர் பக்கத்தில் ஓர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, இந்த இணைய சேவை தடை குறித்து நாம் ஏன் பேசவில்லை என்று கூறியிருந்தார். தற்போது இதற்கு பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடுமையாக பதிலளித்துள்ளார். கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, அவர்களை பற்றி யாரும் பேசவில்லை.

அமேசான் சிஇஓ ஜெப் பெஸோஸ் பதவி விலகல் – புதிய நிர்வாகி நியமனம்!!

காரணம் அவர்கள் யாரும் விவசாயிகள் அல்ல இந்தியாவை பிளவுபடுத்த வந்திருக்கும் பயங்கரவாதிகள். அமெரிக்காவை போல் பிளவுபட்டிருக்கும் நாடுகளை சீனா தனது கட்டிற்குள் கொண்டு வரும். மேலும் தனது ஆதிக்கத்தை சீனா தெரிவிக்கும். பொறுமையாக இருங்கள் முட்டாளே, உங்களை போல் நாங்கள் எங்கள் நாட்டை விற்க மாட்டோம், என்று கடுமையாக ட்வீட் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here