அமேசான் சிஇஓ ஜெப் பெஸோஸ் பதவி விலகல் – புதிய நிர்வாகி நியமனம்!!

0
Jeff Bezos, founder of Amazon and Blue Origin speaks during the JFK Space Summit, celebrating the 50th anniversary of the moon landing, at the John F. Kennedy Library in Boston, Massachusetts, U.S., June 19, 2019. REUTERS/Katherine Taylor

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் சிஇஓவாக ஜெப் பெஸோஸ் பதவி வகித்து வந்தார். தற்போது அவர் அமேசான் நிறுவனத்தின் சிஇஓ பதிவியில் இருந்து விலகுகிறார் என்று அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமேசான்:

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனம் தான் அமேசான். இந்த நிறுவனம் மக்களுக்கு தேவைப்படும் அனைத்து சேவைகளையும் செய்து வருகிறது. மேலும் இவர்களது சேவை அனைத்து தரப்பு பயனாளர்களையும் கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம். இந்த நிறுவனத்தின் சிஇஓவாக ஜெப் பெஸோஸ் வகித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் தொடர்ந்து வகித்து வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் கடந்த மாதம் இவர் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மாஸ்க் கடந்த மாதம் உலக பணக்காரர் பட்டியலில் ஜெப் பெசோஸை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை இடத்தை பிடித்துள்ளார். சமீப காலமாக டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு உயர்ந்ததே இதற்கு காரணம் என்று கூறுகின்றனர். தற்போது ஜெப் பெசோஸை பற்றிய ஓர் அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

கேஜிஎஃப் 2 ரிலீஸ் நாளில் தேசிய விடுமுறை – பிரதமருக்கு யாஷ் ரசிகர்கள் கடிதம்!!

அது என்னவென்றால் அமேசான் நிறுவனத்தின் சிஇஓ பதவியில் இருந்து ஜெப் பெஸோஸ் விலக போவதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் ஜெப் பெஸோஸ் நிர்வாக தலைவர் பொறுப்ப்பில் தொடர்வார் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது புதிய சிஇஓவாக இணைய தள பொறுப்புகளை கவனித்து வரும் அண்டி ஜெசி பொறுப்பேற்கவுள்ளார் என்றும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here