பிக் பாஸ் 4 புகழ் பாலாஜியின் தந்தை மரணம் – அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

0

பிக் பாஸ் 4 புகழ் பாலாஜியின் தந்தை இன்று திடிரென்று மரணம் அடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி அவரது ரசிகர்களும் கவலை அடைத்துள்ளனர். பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் 4 போட்டியாளர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ் 4” நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தான், பாலாஜி முருகதாஸ். இவர் மாடலிங் துறையில் இருந்து வந்தவர். இந்த நிகழ்ச்சிக்கு முன்பு சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவர் மனதிலும் இடம் பிடித்தார். இந்த போட்டியில் இவர் பல சர்ச்சைகளில் சிக்கினார்.

பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி – மத்திய பாதுகாப்பு அமைச்சர் துவக்கி வைப்பு!!

ஆரம்பத்தில் இந்த போட்டியில் தனது சிறுவயது குறித்து கூறும் போது அனைவரும் இவருக்கு ரசிகர்கள் ஆகிவிட்டனர். காரணம், இவர் தனது சிறு வயதில் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், அவரது பெற்றோர்கள் அவரை சரியாக கவனிக்கவில்லை என்று கூறினார். இதனால் அனைவரும் இவர் மேல் அன்பு செலுத்தினர். இப்படியான சூழலில் அதற்கு பின்பு இவர் பல சர்ச்சைகளில் சிக்கினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனாலும், மிகவும் கடுமையான போட்டியாளராக கடைசி வரை சென்றார். ஆரிக்கும் இவருக்கும் பல மோதல்கள் ஏற்பட்டது. இவரது தந்தை தற்போது மரணம் அடைந்துள்ளதாக பாலாஜி தனது சமூகவலைத்தளம் வாயிலாக தெரிவித்துள்ளார். இந்த தகவலால் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here