சவரனுக்கு ரூ.192 குறைந்த தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம்!!

0

நேற்று முதல் தங்கத்தின் விலை சற்றே குறைந்து வந்த நிலையில் சென்னையில் மீண்டுமாக ஆபரணதங்கத்தின் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் இன்றைய நிலவரம் தற்போது வெளியானது.

ஆபரணத்தங்கம் விலை

சென்னையில் இரண்டாவது நாளாக ஆபரணதங்கத்தின் விலை குறைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக ஆபரணதங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துவருகிறது. இதனால் தங்கத்தின் வாடிக்கையாளர்கள் நகை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நேற்று மாலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத்தங்கம் கிட்டத்தட்ட ரூ 500 வரை குறைவாக விற்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அமேசான் சிஇஓ ஜெப் பெஸோஸ் பதவி விலகல் – புதிய நிர்வாகி நியமனம்!!

சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 192 குறைந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ 36,328 க்கு இன்று விற்பனை ஆகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ 24 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ 4,541 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளயின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய மாலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ 75.30 க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ 75.300 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here