லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை – இணையத்தில் கசிந்த தகவல்!!

0

தமிழ்நாட்டின் தொலதிபரான லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துல்லா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை இரட்டை இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இயக்கி வருகின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். படப்பிடிப்பு மணாலி பகுதியில் நடைபெற்று வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பாக லெஜண்ட் சரவணன் நடித்துள்ள சண்டை காட்சிகளின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியானது. இந்த திரைப்படத்தில் லெஜண்ட் சரவணனுடன் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், பிரபு, விவேக், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

‘அறைக்குள் சென்று அழுதேன்’ – கிரிக்கெட் வீரர் ப்ரித்வி ஷா உருக்கம்!!

இப்படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் இப்படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துல்லா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here