கில்லி திரைப்பட நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
asish

கில்லி திரைப்படத்தில் நடித்துள்ள பிரபல வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

கொரோனா தொற்று

தமிழ் திரைப்படங்களின் பிரபல வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. ஹிந்தி மொழிப்பட நடிகரான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, பெங்காலி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் அதிகமான நெகட்டிவ் ரோலில் நடித்துள்ள இவர் நிஜத்தில் ஒரு ஊக்கமூட்டும் பேச்சாளர். தமிழில் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ள நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி, அதிகமான திரைப்படங்களில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு உடைந்த கையுடன் குத்தாட்டம் போட்ட ஜெனிலியா – வைரலாகும் வீடியோ!!

பாலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வரும் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்திக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. அந்த பதிவில், ‘எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், கொரோனா டெஸ்ட் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் அன்பும், வாழ்த்துக்களும் விலைமதிப்பற்றது’ என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here