பிரபல பாலிவுட் நடிகர் மறுத்த படத்தை தட்டி தூக்கிய விஜய் சேதுபதி – உற்சாகத்தில் ரசிகர்கள்!

0

இந்தி திரை உலகத்தில் புகழின் உச்சத்தில் உள்ள நடிகர் சல்மான்கான் மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற படத்தில் நடிக்க முடியாது என மறுத்ததால், அந்த வாய்ப்பு தற்போது தமிழ் நடிகர் விஜய்சேதுபதிக்கு கிடைத்துள்ளது.

இந்தியில் விஜய் சேதுபதி:

தமிழ் திரையுலகத்தில் கலக்கி வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது இந்தியில் மும்பை கார், மெரி கிறிஸ்துமஸ், காந்தி டாக்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.  இதில், மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற படம் பாலிவுட் நடிகர் சல்மான் கானை மனதில் வைத்து  இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் எழுதிய கதை. அந்த கதை சல்மான் கானுக்கு பிடித்திருந்தாலும், படத்தில் முக்கிய மாஸ் அம்சங்கள் குறைவாக இருந்ததால் அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து இந்த வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு சென்றுள்ளதாகவும், இந்த படத்தில் இவருக்கு நாயகியாக கத்ரீனா கைஃப் நடிக்க உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. விஜய் சேதுபதி கோலிவுட் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் ஆதிக்கம் செலுத்துவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

‘பொண்ணுங்க மட்டும் போலீஸ் ஆகவே கூடாது’ – சந்தியாவின் ஐபிஎஸ் கனவை சிதைக்கும் சரவணன்!!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here