அப்பாடா ஒருவழியா மீட்டுட்டாங்கப்பா – சூயஸ் கால்வாயில் மிதக்கும் நிலைக்கு கொண்டு வரப்பட்ட சரக்கு கப்பல்!!

0

கடந்த 23ம் தேதி அன்று சூயஸ் கால்வாயில் பெரிய சரக்கு கப்பல் ஒன்று தரைதட்டி நின்றது. இதனால் அந்த வழியாக செல்லும் கப்பல்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடல் போக்குவரத்து:

மிக பெரிய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி போக்குவரத்து தளமாக காணப்படுவது தான் கடல் வழி போக்குவரத்து சேவை. இதன் மூலம் பல கோடிக்கணக்கான மதிப்பில் போக்குவரத்து சேவை நடைபெற்று வருகிறது. இதன்மூலம் வெளிநாடுகளில் இருந்து பெட்ரோல், டீசல் மேலும் நம் நாட்டிற்கும் மற்றும் நம் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு உணவு பொருட்கள் போன்றவற்றை கடல் வழியாக போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் கடந்த 23ம் தேதி அதாவது கடந்த வாரம் செவ்வாய்கிழமை அன்று யாரும் எதிர்பாராத வகையில் மிக பெரிய சரக்கு கப்பல் ஒன்று சூயஸ் கால்வாயில் தரைதட்டி நின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சரக்கு கப்பல் சுமார் 20 ஆயிரம் பெட்டகங்களை கொண்டுள்ளது. இந்த கப்பல் அங்கு சிக்கியதால் ஆசியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே நடக்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் இருபுறமும் சுமார் 320க்கும் அதிகமான கப்பல்கள் கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

இதனால் பல அத்யாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் விலை ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் அச்சத்துக்கு உள்ளாகினர். மேலும் சூயஸ் கால்வாயில் இருந்து கப்பலை மீட்பதற்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. சுமார் ஒருவார முயற்சிக்கு பின்பு தற்போது தரைதட்டி நின்ற கப்பலை மிதக்கும் நிலை கொண்டு வந்து கப்பலை மீட்டுள்ளனர். இதனால் அங்கு போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here