இதே நாளில் சேவாக் செய்த சாதனை – மெமரிஸ் பிரிங் பேக்!!

0
virender sehwag

கிரிக்கெட் உலகில் நட்சத்திர ஆட்டக்காரராக விளங்கியவர் தான் வீரேந்தர் சேவாக். இவர் கடந்த 2004ம் ஆண்டில் இதே நாளில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஓர் சாதனையை படைத்து அசத்தினார்.

வீரேந்தர் சேவாக்:

இந்திய அணி சார்பாக துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி பல சாதனைகளை படைத்தவர் தான் வீரேந்தர் சேவாக். இவர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார். இவர் கடந்த 1999ம் ஆண்டு முதல் தனது சர்வதேச ஒரு நாள் தொடரையும் கடந்த 2001ம் ஆண்டு முதல் தனது சர்வதேச டெஸ்ட் வாழ்க்கையையும் துவக்கினார். இவர் இதுவரை விளையாடிய 104 டெஸ்ட் போட்டிகளில் 8,586 ரன்களை குவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

virender sehwag

அதில் 23 சதம் மற்றும் 38 அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ஐபிஎல் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை தலைமை தாங்கினார். இதுபோல் அனைத்து தரப்பு போட்டிகளிலும் தனது கால்தடத்தை பதித்து பல சாதனைகளை செய்துள்ளார். அதில் குறிப்பான ஒன்று தான் இவர் டெஸ்ட் போட்டிகளில் அடித்த மூன்று சதம். இவர் கடந்த 2004ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் 309 ரன்களை அடித்து அரங்கத்தையே அதிரவைத்தார்.

virender sehwag

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

மேலும் டெஸ்ட் போட்டிகளில் 300 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். தற்போது இவர் இந்த சாதனையை படைத்தது 17 வருடங்கள் ஆகியும் இன்னும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. தற்போது இவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்து மழையை தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here