பீகார், ம.பி., உட்பட 9 மாநில இடைத்தேர்தல் முடிவுகள் – பாரதிய ஜனதா கட்சி ஆதிக்கம்!!

0

பாரதிய ஜனதா கட்சி ஒன்பது மாநில இடைத்தேர்தலில் போட்டியிட்டு பெரும்பலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மாநில இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில், பாஜக ஆச்சரியப்படும் அளவிற்கு அதிகபட்ச இடத்தை பெற்றுள்ளது. இதன்மூலம், பாஜக-வின் பலம் வெளிப்படுகிறது.

தேர்தல் முடிவுகள்:

மத்திய பிரதேசம் உள்ளிட்ட 9 மாநிலங்களிலும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட்டது. மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று மாநில இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாஜக, 28 தொகுதிகளில் 19 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மத்தியபிரதேசத்தில் சட்டப்பேரவையில் தனது வெற்றியை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக உறுப்பினர் எண்ணிக்கை 116 க்கு பதிலாக 126 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. குஜராத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 8 தொகுதிகளில் போட்டியிட்டு, ஆளும் பாஜக 7 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மீதமுள்ள ஒரு தொகுதியில் சமாஜ்வாதி இடம் பிடித்தது.

கர்நாடகாவில் நடைபெற்ற இடைதேர்தலின் 2 தொகுதிகளிலுமே பாரத ஜனதா கட்சி வெற்றிபெற்றது. ஒடிசாவில் இடைத்தேர்தல் நடைபெற்ற 2 தொகுதிகளிலும் ஆளும் பிஜு ஜனதா தளம் இடம்பிடித்தது. மணிப்பூரில் தேர்தல் நடைபெற்ற 5 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 4 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தெலுங்கானாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டு, இருந்த ஒரு தொகுதியிலும் ஆளும் தெலுங்கானா ராட்சீயா சமதியை தோற்கடித்து வெற்றி பெற்றது. சத்தீஸ்கர் மற்றும் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற ஒரு தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற்றார். ஜார்கண்டில் நடைபெற்ற இடைத்தேர்தல், 2 தொகுதிகளில் காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், ஜார்கண்ட் முக்தி மோட்சா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here