மாநில பேரிடராக ‘பறவை காய்ச்சலை’ அறிவித்த கேரள அரசு – 48,000 பறவைகளை கொல்ல முடிவு!!

0

கேரள மாநிலத்தில் தற்போது தீவிரமாக பரவி வரும் பறவைக் காய்ச்சலை மாநில பேரிடராக அம்மாநில அரசு அறிவித்து தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. மேலும் கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பறவைக் காய்ச்சல்:

இந்தியாவில் முதன் முதலில் கேரள மாநிலத்தில் தான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் அம்மாநில அரசு மேற்கொண்ட தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக அங்கு கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் அங்கு தொற்று எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. தற்போது அங்கு பறவை காய்ச்சல் தீவிரமாக பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கேரளாவின் கோட்டயம் மற்றும் ஆலப்புழா ஆகிய இரு மாவட்டங்களின் சில பகுதிகளில் இறந்த வாத்துகளின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டபோது மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டது. இருப்பினும், இந்த நோய் பொது மக்களுக்கு பரவவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

ஒரு பண்ணையில் சுமார் 1,650 வாத்துகள் இந்நோயால் இறந்த பின்னர், கோட்டயத்தின் நீண்டூர் எனும் பகுதியில் இதன் தொற்று உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்பதால் பரவல் குறைவாகவே உள்ளது. மேலும் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமமாவட்டத்தில் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட எட்டு குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

ஜனவரியில் இந்த 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – மேலாண் இயக்குனர் அறிவிப்பு!!

ஆலப்புழா மற்றும் குட்டநாடு பகுதிகளிலும் இந்த நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தலவடி, எடத்வா, பல்லிபாட் மற்றும் தாசக்கார பஞ்சாயத்துகளில் பரவியுள்ளது. பல மாவட்டங்களில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு விரைவான தடுப்பு மணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நோயைக் கட்டுப்படுத்த ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் அனைத்து பறவைகளையும் கொல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் சுமார் 48,000 பறவைகள் கொல்லப்பட வேண்டியிருக்கும்.

முதல்வருடன் கலந்தாலோசித்த பின்னர் இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு முடிவு செய்யப்படும் என்று அம்மாநில வனத்துறை அமைச்சர் கே.ராஜு தெரிவித்தார். கடந்த ஆண்டும், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. நோய் மேலும் பரவாமல் தடுக்க பறவைகள் இதேபோல் கொல்லப்பட்டன. தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here