கொரோனா பாதிப்பு எதிரொலி – லெபனானில் மீண்டும் பொதுமுடக்கம்!!

0
corona curfew
corona curfew

லெபனானில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் அந்நாட்டில் மீண்டும் பொதுமுடக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் வியாழன் முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல்:

கடந்த 2019 ம் வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் பரவிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பல நாடுகளை சேர்ந்த மக்களை பாதிப்பிற்குள்ளாகியது. இந்நிலையில் பிப்ரவரி 2020 ம் ஆண்டு முதன் முதலில் லெபனானில் முதல் கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டது. தொற்றின் வேகம் அதிகரித்த நிலையில் அந்நாட்டு அரசு ஏப்ரல் மாதம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. நாட்டின் பொருளாதாரத்தை கணக்கில் கொண்டு அக்டோபர் மாதம் முதல் ஊரடங்கு தளர்வை ஏற்படுத்தியது.

மீண்டும் பொது முடக்கம்

இதனை தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா நோய் தொற்றானது மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு வருகின்ற வியாழன் முதல் பிப்ரவரி 1 வரை முழு ஊரடங்கை அறிவித்திருக்கிறது லெபனான் அரசு. மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதி மற்றும் இட வசதி இல்லாமையால் அரசு இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை அமைச்சர் ஹமாத் ஹாசன் கூறியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பல்பொருள் அங்காடிகள் மற்றும் மருந்தகங்கள் மாலை 5:00 மணி வரை செயல்படும் எனவும் அதை தவிர அனைத்து உணவகங்களும் மூடப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள், பத்திரிக்கையாளர்கள் தவிர மற்ற அனைவருக்கும் மாலை 6 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பண மோசடி வழக்கில் கைதான ஹேமந்த் – வெளியான திடுக்கிடும் தகவல்!!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,861 ஆகவும், இதுவரை உள்ள மொத்த பாதிப்பு 1,92,139 ஆகவும், 1,512 பேர் உயிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here