Thursday, May 2, 2024

கடும் வெள்ளத்தால் 10 லட்சம் பேர் பாதிப்பு – பீகாரில் 18 பேர் பலி..!!

Must Read

பீஹாரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டும் 18 பேர் மரணமும் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழை:

கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் கடுமையாக மழை பெய்து வருகிறது. அதில், அதிகமாக பாதிக்கப்பட்டது, பீகார் மாநிலம் தான். அங்கு, கிட்டத்தட்ட கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. வெள்ளப்பெருக்கு ஏறுபட்டதால் ஆறுகள் கறைகளை உடைத்து கொண்டு வெள்ளநீர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமத்தில் புகுந்து உள்ளது.

மாநில முதல்வருக்கு கொரோனா உறுதி – அதிர்ச்சியில் மக்கள்!!

flood in bihar
flood in bihar

இதனால், மக்களால் அங்கு வசிக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. இப்படி வெள்ளநீர் கிராமத்திற்குள் உள்நுழைந்து உள்ளதால், பழுது பார்க்கும் பணிகள் , 2 அல்லது 3 நாட்களுக்கு பிறகு தான் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பேரிடர் மேலாண்மை:

நேபாள எல்லையில் உள்ளது, சம்பாரன் நதி. இந்த நதி தற்போது, வெள்ளப்பெருக்கால் அபாய கட்டத்தை அடைத்து உள்ளது. இதனால், அங்கு 7 பேர் வெள்ள பாதிப்பால் உயிரிழந்து உள்ளனர்.

1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களை, மாநில மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மையை சேர்ந்த வீரர்கள் தான் தற்போது பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி வருகின்றனர். இந்த பேரிடர் மேலாண்மையில் 22 குழுக்கள் உள்ளது. இதுவரை அவர்கள் 9 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

bihar flood resucing
bihar flood resucing

இது குறித்து பேரிடர் மேலாண்மை கூறியதாவது ” 12,000 மக்கள் பாதுகாப்பாக 22 நிவாரண முகாம்களில் உள்ளனர். 1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு உணவு வழங்க 200 கும் மேற்பட்ட சமூக சமையல் கூடங்கள் இயங்கி வருகின்றது. நிவாரணம் வழங்க முடியாத இடங்களுக்கு சென்று மக்களுக்கு வழங்க விமான சேவையை நாடி உள்ளோம்” என்று தெரிவித்து உள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும்  ஜூன் 2ம் தேதி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -