Monday, June 14, 2021

சுஷாந்த் சிங்கின் கடைசி படம் எப்படி இருக்கு???

Must Read

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் முகேஷ் சப்ரா இயக்கத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத், சஞ்சனா சங்கி நடிப்பில் உருவான தில் பேச்சாரா OTT ரிலீசாக ரிலீஸ் ஆகி இருக்கிறது.

தில் பேச்சரா

மறந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் கடைசி திரைப்படமான ‘தில் பேச்சரா’ நேற்று இரவு 7.30 மணியளவில் அமேசான் பிரைமில் வெளியானது

இயக்குநர் முகேஷ் சாப்ரா இயக்கிய இந்த படத்தில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், சஞ்சனா சங்கி, சைஃப் அலி கான் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கதைச் சுருக்கம்

ஆங்கிலத்தில் வெளியான ‘The Fault in Our Stars’ என்ற திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த ‘தில் பேச்சாரா’. கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட இருவர் காதலிப்பதும், அதில் நாயகன் இறுதியில் முன்னதாக மறைவதும் தான் கதை.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில், பின்னணி இசை மற்றும் பாடல்கள் நெஞ்சை வருடுகின்றன.

சுஷாந்த் சிங்கின் கடைசி நடிப்பு

சுஷாந்த் சிங் படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை ஒரு இடத்தில் கூட சளிப்புத் தட்டாத வகையில் ஒட்டுமொத்த எனர்ஜியையும் வெளியே கொண்டு வந்து நடித்துத் தள்ளுகிறார்.சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகராகவே படம் முழுவதும் நடித்து இருக்கிறார்.

மத்தியப்பிரதேச ஆளுநரானார் திருமதி.ஆனந்திபன் படேல் – உத்தரப்பிரதேச ஆளுநர் பதவியுடன் கூடுதல் பொறுப்பு!!

‘கிஸ்ஸி’ கதாபாத்திரத்தில் நடித்துள்ள சஞ்சனா சங்கி என்னும் அறிமுக ஹீரோயின், கேன்சர் நோயாளியாக வேற லெவல் ஆக்டிங் செய்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் ஒரே ஒரு காட்சியில் தான் வந்து செல்கிறார். ஆனால், அந்த ஒரு காட்சி படத்தின் மிகவும் முக்கியக் காட்சியாக உள்ளது.

நமது நினைவில் வாழும் சுஷாந்த்

நிரந்தரமற்ற இந்த வாழ்வில், இருக்கும் வரை சந்தோஷமாக வாழ வேண்டும், நமக்கு பிடித்தவர் மறைந்து விட்டால், நாம் துக்கத்தில் வாட வேண்டாம். அவர்கள் நினைவுகளுடன் நமது வாழ்க்கையை வாழலாம் என்ற மையக் கருத்து உள்ள படம்.
உணர்வுகள் மேலோங்கி இருப்பதால் நிச்சயம் இந்த படத்தை பார்த்து ரசிக்கலாம் சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்காக!!

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பாலியல் சீண்டல் எதிரொலி: சிவசங்கர் பாபா நடத்தும் பள்ளியில் இருந்து 50% மாணவர்கள் விலகல்!!!

சிவசங்கர் பாபா நடத்தும் பள்ளியில் இருந்து, 50 சதவீத மாணாக்கர்கள் டிசி வாங்கிச் சென்றுவிட்டதாக கூறப்படும் நிலையில், பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் தற்போது ராஜினாமா செய்துள்ளனர். பிரபல...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -