நிஷா, ரியோவின் முகத்திரையை கிழிக்கும் அனிதா – தரமான சம்பவங்களுடன் வெளியான ‘பிக் பாஸ்’ ப்ரோமோ!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பல சண்டைகள் ஏற்பட்டு வருகிறது. யார் சுவாரசியம் குறைவாக இருக்கிறார்கள் என்று தேந்தெடுக்க போய் தற்போது பல களேபரங்கள் உருவானது. தற்போது ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ரோபோ டாஸ்க் கொடுக்கப்பட்டதை அடுத்து அர்ச்சனா அப்பாவை பற்றி நிஷா பல கேள்விகளை கேட்டு பல சங்கடத்தை ஏற்படுத்தியது. மேலும் நிஷாவும் இந்த செயலுக்காக மிகவும் வருத்தப்பட தான் செய்தார். அவ்வளவு நேரம் அடக்கி வைத்த கோவத்தை அர்ச்சனா வெளிப்படுத்தவும் செய்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் நிஷா மற்றும் அர்ச்சனா இடையே சிறிய விரிசலும் ஏற்பட்டுள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் நேற்று சாதாரண மனுஷியாக இருந்த அர்ச்சனா பலருக்கும் பழிவாங்கும் விதமாக டாஸ்கை கொடுத்தார். அனிதாவை முட்டையால் பல் விலக்கவும் சொன்னார். இது பார்ப்பவரை மிகவும் முகம் சுளிக்க செய்தது. ஆரம்பத்தில் இருந்தே அர்ச்சனா செய்து வரும் காரியங்கள் அனைத்தும் கடுப்பேற்றும் விதமாகவே உள்ளது.

இந்நிலையில் இந்த வார டாஸ்க்கில் யார் சுவாரசியம் குறைவாக இருந்தார் என்ற அடிப்படையில் அனிதா மற்றும் ரமேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அனிதா ரியோவிடம் இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதாவது நிஷா அர்ச்சனா அப்பாவை பற்றி பேசியதால் வருத்தமடைந்த அழுக ஆரம்பித்தார். இதனை தான் அனிதா குறிப்பிட்டு கூறுகிறார்.

சித்ராவிற்கு தொல்லை கொடுத்து வந்த அரசியல் பிரமுகர்!!

நிஷா செய்தது தவறு ஆனால் நான் செய்தால் சுவாரசியம் கம்மியா?? என்று கேட்க ரியோ அங்கிருந்து செல்கிறார். இதற்கு அனிதா ரியோ இப்படி தான் ஒரு இடத்துல நின்னு பதில் சொல்ல மாட்டாரு என்று வார்த்தையை விட ரியோ கோவத்தின் உச்சிக்கே சென்று கத்துகிறார். அடுத்ததாக அர்ச்சனா வந்து என் பெயரை எதுக்கு இழுக்குற என்று கேட்க டாஸ்க் வந்த நான் எல்லாரையும் இழுக்க தான் செய்வேன் என்று அனிதா பட்டுபட்டன்று பேசி விடுகிறார்.

இதனால் அனிதாவிற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. தனி ஆளாக இருந்து அனைவரையும் கேள்வி கேட்க்கும் அனிதாவிற்கு தற்போது ஆதரவாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வாரத்தில் நிஷா தான் வெளியேற வேண்டும் என்றும் மக்கள் ஆணித்தனமாக கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here