ஆன்லைனில் நீட் தேர்வு நடைபெறுமா?? மத்திய கல்வி அமைச்சர் விளக்கம்!!

0
ramesh-pokhriyal-nishank
ramesh-pokhriyal-nishank

2021ம் ஆண்டு நடைபெறவுள்ள சி.பி.எஸ்.சி மற்றும் நீட் பொதுத்தேர்வுகள் நடப்பது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் முகநூல் நேரலையில் மூலம் கல்வி தொடர்பாக நாட்டின் மக்களிடம் கலந்துரையாடினார். அந்த உரையாடலில் அவர், கொரோனா நோய்த்தொற்று காலத்திலும் நாட்டில் கற்றுவித்தல் ஆன்லைன் மூலமாக சிறப்பாக நடைபெறுகிறது. இதற்காக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களின் நலனை மட்டுமே மனதில் வைத்து செயல்படுகிறார். மத்திய அரசின் உத்தரவின் பேரில் நாட்டில் 17 மாநிலங்களில் சென்ற மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இருந்தபோதிலும் மாணவர்களின் வருகை முழு அளவில் இல்லை. இந்த நிலை விரைவில் மாறி மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். ஆன்லைனிலும் பாடங்கள் நடத்தப்பட்டுக் கொண்டுதான் உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த ஆண்டின் இறுதித்தேர்வுகளை கொரோனா நெருக்கடியிலும் சி.பி.எஸ்.சி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் சிறப்பாக எழுதி தேர்ச்சி பெற்றனர். உலகிலேயே 2020ல் இந்தியாவில் நடத்தப்பட்ட நீட் தேர்வு தான் மிகப் பெரிய தேர்வு ஆகும். இதை 17 இலட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். ஜேஇஇ மெயின் மற்றும் ஜேஇஇ அட்வான்சுடு தேர்வுகளும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. மேலும் சி.பி.எஸ்.சி மாணவர்கள் மனஅழுத்தம் சார்பாக ஏற்படும் குழப்பங்களை சரிசெய்வதற்காக சிறந்த நிபுணர்களின் குழுவிடம் ஆலோசித்து, மாணவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஹெல்ப் லைன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளோம்.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது வழக்கு!!

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தியாவில் கல்வி உலகத்தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜேஇஇ, நீட், சிபிஎஸ்இ தேர்வுகளை ஒத்திவைப்பது அல்லது ரத்து செய்வது தொடர்பாக எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த ஆண்டின் சி.பி.எஸ்.சி மாணவர்களுக்கான செயல்முறை தேர்வுகள் பள்ளிகளில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள முடியாத மாணவர்களுக்காக மாற்று ஏற்பாடுகள் பின்னர் அறிவிக்கப்படும். நுழைவுத்தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை குறைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப 10 முதல் 20 சதவீதம் வரையிலான பாடங்கள் குறைக்கப்படும். அது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும்.

சி.பி.எஸ்.சி 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்து (cbse.nci.in மற்றும் cbseacademic.nic.in) என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று பார்க்கலாம். ஆனால் சி.பி.எஸ்.சி தேர்வுகள் ரத்து செய்ய வேண்டும் என்று பலரும் கருது தெரிவிக்கின்றனர்.

2021ம் ஆண்டிற்க்கான நீட் தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்று மானவர்கைளன் தரப்பில் கேட்டு வருகின்றனர். அதற்க்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. அது தொடர்பாக அரசுக்கு எந்த ஒரு நிலைப்பாடும் இல்லை. தரவுகள் கட்டாயம் நடத்தப்படும். ஆனால் ஆன்லைனில் நடத்தப்படாது. நிச்சயமாக பேப்பேர், பேனா கொண்டு தான் நீட் தேர்வு நடைபெறும். இவ்வாறு மத்திய கல்வி அமைச்சர் கூறியிள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here