ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது வழக்கு – சிக்கலில் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் பயனர்கள்!!

0

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற அனைத்து வலைத்தளங்களையும் தனக்கு சொந்தமாக வைத்திருப்பதால் அந்நிறுவனத்தின் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், அதனால் வளர்ந்து வரும் சமூக வலைத்தளங்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து அமெரிக்கா மற்றும் அதன் 48 மாகாணங்களை ஃபேஸ்புக் நிறுவனர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீது வழக்கு:

இன்று சமூக வலைத்தளங்கள் மனிதர்களை ஆக்கிரமித்துக் கொண்டு வருகின்றது. உலகில் வாழும் ஒவ்வொரு மக்களும் ஒருவர் மற்றவரை தெரியாமல் வாழலாம். ஆனால் சமூக வலைத்தளங்கள் முழு உலகத்தையே தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது. இதனால் மக்களும் அதற்கு அடிமையாகி வாழ்கின்றனர்.உலக அளவில் சுமார் 150 கோடிக்கும் அதிகமானோர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றார்கள். இவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்களும், இளைஞர்களும். சமூக வலைத்தளங்களை இவ்வளவு பேர் பயன்படுத்துவதற்கு முக்கிய காரணம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அனைவராலும் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்றவை முதல் மூன்று இடத்தில உள்ளது. குறிப்பாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். மேலும் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்றவற்றையும் தன நிறுவனத்திற்கு கீழ் கொண்டு வந்துள்ளார். இப்படி அவர் நிறுவனம் கொடிகட்டி பறப்பதால் சமூக வலைத்தளமாக சிறு நிறுவனங்கள் ஆரம்பித்தாலும் அவற்றை ஆரம்பத்திலேயே நசுக்கிவிடுவதாக புகார் எழுந்துள்ளது.

ஆதார் முகவரியை ஆன்லைனில் மாற்ற தேவையான ஆவணங்கள்!!

Mark Zuckerberg

இது தொடர்பாக அமெரிக்க அரசு நிறுவனர் ஃபேஸ்புக் மார்க் சக்கர்பெர்க் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் மக்கள் அனைவரும் ஒரே நிறுவனத்தின் கீழ் உள்ளதால் மற்ற நிறுவனங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. அப்படி மீறி அவர்கள் கால் பதித்தலும் அதிக காசை கொட்டிகொடுத்து இந்நிறுவனம் விலைக்கு வாங்கும் சூழ்நிலை உள்ளது.

இந்த வழக்கால் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, அவர்களின் தகவல்கள் பாதுகாக்கப்படும் எனவும், இந்த வழக்கில் அமெரிக்கா அரசு வெற்றி கண்டால் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் நிறுவனம் தனி தனியாக செயல்படும் பொழுதுபோக்காக நாம் பயன்படுத்தும் சமூக வலைதளங்கள் நம்மை வைத்தே பல ஆயிரம் கோடிகளை ஈட்டி வணிகம் செய்கின்றன. குறைந்தபட்சம் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களுக்காகவது இந்த சமூக வலைதளங்கள் உறுதி அளிக்க வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here