குக் வித் கோமாளி ஷூட்டிங்கில் ஜிபி முத்து செய்த அலப்பறை.., அப்பறம் என்ன விஜய் டிவி டிஆர்பி எங்கேயோ போகப்போகுது!!

0
குக் வித் கோமாளி ஷூட்டிங்கில் ஜிபி முத்து செய்த அலப்பறை.., அப்பறம் என்ன விஜய் டிவி டிஆர்பி எங்கேயோ போகப்போகுது!!
குக் வித் கோமாளி ஷூட்டிங்கில் ஜிபி முத்து செய்த அலப்பறை.., அப்பறம் என்ன விஜய் டிவி டிஆர்பி எங்கேயோ போகப்போகுது!!

பிக்பாஸில் இருந்து வாக்கவுட் ஆன ஜிபி முத்து தற்போது மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் பேமஸ் ஷோவில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் ஜிபி முத்து:

சமூக வலைத்தளங்களில் தனது பேச்சுக்கள் மூலமாகவும், எதார்த்தமான நடிப்பாலும் மக்கள் மத்தியில் சோசியல் மீடியாவில் சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் தான் ஜிபி முத்து. அவர் யூ டியூபில் கலக்கி கொண்டிருக்கும் போது இவருக்கு விஜய் டிவியின் டாப்பில் இருக்கும் நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 6ல் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அங்கு சென்ற முதல் நாளிலே மக்கள் மற்றும் கமல் சாரை கவர்ந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் தன் மகன் மீது கொண்ட அலாதி அன்பினால் ஒரு வாரம் கூட தாக்கு பிடிக்க முடியாமல் வாக்கவுட் ஆகி வெளியேறினார். சமீபத்தில் இவர் நடித்த ஓ மை ஹோஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் படைப்பில் நடிகர் அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தில் ஜிபி முத்து நடிக்க இருப்பதாக சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

காதலாவது மண்ணாவது., கதிரவனுடன் சண்டைக்கு போன ஷிவின்! முதல்ல நீங்க பண்ணுங்க என ஆவேசம்!!

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில், விஜய் டிவியின் டிஆர்பியை அதிகரிக்க குக் வித் கோமாளி சீசன் 4யை தொடங்க இருக்கின்றனர். சமீபத்தில் இதற்கான ப்ரோமோ வீடியோ வெளியானது. இதில் என்ன அதிர்ச்சி என்றால் பழைய கோமாளிகள் யாரும் இல்லை என்பது தான். அதிலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி என்றால் இந்த ஷோவில் கோமாளியாக ஜிபி முத்தும் கலந்து கொள்கிறார் என்பது தான். இந்நிலையில் இவர் லேட்டஸ்டாக எடுத்து வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் படு வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here