T20யில் அதிக சிக்ஸர்கள் பட்டியலில் இணைந்த “மிஸ்டர் 360″…, டாப் 5 வீரர்கள் இதோ!!

0
T20யில் அதிக சிக்ஸர்கள் பட்டியலில் இணைந்த
T20யில் அதிக சிக்ஸர்கள் பட்டியலில் இணைந்த "மிஸ்டர் 360"..., டாப் 5 வீரர்கள் இதோ!!

இலங்கைக்கு எதிராக இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்டியதன் மூலம் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.

அதிக சிக்ஸர்கள்:

இந்திய அணி இந்த வருடத்தின் தொடக்கத்தில், இலங்கை அணிக்கு எதிராக டி20 தொடரை விளையாடியது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில், முதல் போட்டியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, 2வது போட்டியில் தோல்வியை தழுவியது. இதையடுத்து, தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3 வது போட்டியில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த கடைசி டி20 போட்டியில், இந்தியாவின் மிஸ்டர் 360 என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ், 51 பந்தில் 7 பவுண்டரிஸ், 9 சிக்ஸர் உட்பட 112* ரன்கள் எடுத்து அசத்தி, டி20யில் தனது 3வது சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம், டி20 யில் அதிக சதம் அடித்த வீரர்களில் 2 வது இடத்தை பிடித்துள்ளார். மேலும், டி20யில் அதிக சிக்ஸர்களை அடித்துள்ள இந்திய வீரர்கள் பட்டியலிலும் முன்னிலை பெற்றுள்ளார்.

IND vs SL: முதல் ஒருநாள் போட்டியை பார்க்க விடுமுறை அறிவித்த அரசு!!

இவர் இதுவரை, 45 டி20 போட்டிகளில் 92 சிக்ஸர்களை அடித்து, டி20 யில் அதிக சிக்ஸர் அடித்த 4 வது இந்திய வீரரானார். இந்த பட்டியலில், ரோஹித் சர்மா 148 டி20யில் 182 சிக்ஸர்கள், விராட் கோலி 115 டியில் 117 சிக்ஸர்கள் மற்றும் கே எல் ராகுல் 72 டியில் 99 சிக்ஸர்கள் அடித்து முதல் 3 இடத்தில் உள்ளனர். இதில், இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் 58 டி20 யில் 74 சிக்ஸர்கள் அடித்து 5 வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here