மீண்டும் குத்தாட்டத்தில் இறங்கிய பிக் பாஸ் பிரபலங்கள் – ட்ரெண்டிங்காகும் வீடியோ!!

0

பிக் பாஸ் 4 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சம்யுக்தா, சோம், ரமேஷ் இணைந்து குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் 4

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபலமாக ஒளிபரப்பாகி வந்தது. முதல் சீசனில் இருந்து தற்போது முடிவடைந்த 4வது சீசன் வரை மக்கள் மத்தியில் பிரபலமானது. முதல் சீசனில் கலந்துகொண்டவர்களால் தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியே சூடுபிடிக்க ஆரம்பித்தது.

காயத்ரி, சக்தி இவர்கள் வீட்டில் செய்த அட்டகாசங்கள் கொஞ்சம், நஞ்சம் கிடையாது. அதனால் தான் அவர்கள் மக்களிடம் கெட்ட பெயரும் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இப்படி இருக்க அடுத்து வந்த சீசன்களில் பெயர் கெட்ட வந்து விடுமோ என்று பார்த்து பார்த்து நடந்து கொள்ள ஆரம்பித்தனர்.

இதனால் தான் 2வது சீசன் அந்த அளவிற்கு பிரபலம் கிடைக்கவில்லை. ஆனால் மூன்றாவது சீசன் வனிதாவால் டாப் ஹாட் அடித்தது. ஒவ்வொரு சீசனிலும் யாராவது ஒருவர் மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். ஆனால் அவர்களால் அந்த சீசனில் கடைசி வரை நிலைக்க முடிவதில்லை.

ஆனால் 4வது சீசனில் முற்றிலும் வித்தியாசமாக மக்கள் ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்த்த ஆரி தான் கடைசி வரை இருந்து டைட்டில் கைப்பற்றினார். இந்த சீசனில் தான் கடந்த சீசனை விட பல சண்டைகள் ஏற்பட்டது. அர்ச்சனா அன்பு என்ற பெயரில் அனைவரையும் ஆட்டிப்படைத்து வந்தார்.

தற்போது 4வது சீசன் முடிவடைந்த நிலையில் பிபி ஜோடிகள் என்ற புதிய நிகழ்ச்சி களமிறங்கியுள்ளது. இப்படி இருக்க தற்போது சம்யுக்தா, சோம், ரமேஷ் என அனைவரும் இணைந்து குத்தாட்டம் போடும் வீடியோ இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here