ராதிகாவின் மகளுடன் பிறந்த  நாளை கொண்டாடிய சரத்குமார் – வைரலாகும் புகைப்படங்கள்!!

0

சரத்குமார் தனது 67வது பிறந்த நாளை நேற்று (ஜூலை,14 2021) தன் குடும்பத்தினருடன் கொண்டாடினார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது.

கோலிவுட்டில் எதிர்மறை கதாபாத்திரத்தில் அதாவது வில்லன் நடிகராக கால்பதித்து, பிறகு முன்னனி ஹீரோவாக வெற்றி பெற்றவர்களில் சரத்குமாரும் ஒருவர். குறிப்பாக 1990 ஆம் ஆண்டு வெளிவந்த புலன் விசாரணை என்ற படத்திற்காக சரத்குமார் சிறந்த வில்லன் விருதை பெற்றார். பிறகு, சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை அடைந்தார்.

தமிழ் சினிமாவில் கட்டுமஸ்தான தேகம் கொண்டிருந்த தொடக்க நடிகர்களில் சரத்குமாரும் ஒருவர். இவர் தனது 67 வது பிறந்தநாளை ஜூலை 14 ஆம் தேதி கொண்டாடினார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மனைவி ராதிகா, மகள் வரலக்ஷ்மி, ராதிகாவின் மகள் ராயேன் மற்றும் மகன் ராகுல் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி பலரால் பார்க்கப்பட்டு வருகிறது.

சரத் குமாரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here