என்னை அரசியலுக்கு வர வச்சுராதீங்க , அப்புறம் தாங்க மாட்டிங்க – முதல்வருக்கு டேக் செய்து ட்வீட் போட்ட பாலாஜி முருகதாஸ்!!

0
என்னை அரசியலுக்கு வர வச்சுராதீங்க , அப்புறம் தாங்க மாட்டிங்க - முதல்வருக்கு டேக் செய்து ட்வீட் போட்ட பாலாஜி முருகதாஸ்!!
என்னை அரசியலுக்கு வர வச்சுராதீங்க , அப்புறம் தாங்க மாட்டிங்க - முதல்வருக்கு டேக் செய்து ட்வீட் போட்ட பாலாஜி முருகதாஸ்!!

பிக்பாஸ் பிரபலமான பாலாஜி முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதல்வரை டேக் செய்து வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சை பொருளாக மாறியுள்ளது.

பாலாஜி முருகதாஸ்:

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு மக்களிடம் பிரபலமானவர் தான் பாலாஜி முருகதாஸ். அதன் பின்னர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று டைட்டில் பட்டத்தையும் தட்டி சென்றார். அதற்கடுத்து எந்த வாய்ப்பும் கிடைக்காமல் தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில் நேற்று பாலாஜி முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை டேக் செய்து ’தயவு செய்து டாஸ்மாக் கடைகளை மூடுங்கள், இது ஏராளமான உயிர்களை அழித்துள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டால் அழிந்தவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்த்தால் குடியால் அழிந்தவர்கள் தான் அதிகம் என்று பதிவு செய்திருந்தார்.

IPL 2023: , CSK, RCB-ல் காயம் காரணமாக விலகிய நட்சத்திரங்கள்…, மாற்று வீரர்களை அறிவித்த நிர்வாகங்கள்!!

அதோடு விட்டுவிடாமல், இந்த குடியால் தான் என்னை போன்ற பலர் அனாதையாகியுள்ளனர். எக்கசக்க குடும்பங்கள் அழிந்து போகின்றனர். எனவே தான் டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்கிறேன். மேலும் தயவு செய்து அரசியலுக்கு என்னை இழுக்காதீர்கள், அப்படி இழுத்தீங்க என்றால் உங்களால் தாங்க முடியாது என பதிவிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் சிலர் அவர் பிரபலமாக வேண்டும் என்று இந்த மாதிரி செய்கிறார் என்று கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here