பாலாஜிக்கு எதிராக கிளம்பும் ஆதாரம் – ட்விட்டரில் காட்டுத்தீயாய் பரவும் பதிவு!!

0
bigg boss

விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இந்நிலையில் தற்போது பாலாஜியால் தொடர்ந்து பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பாலாஜிக்கு எதிராக சில ஆதாரங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்

பிக் பாஸில் சில நாட்களாக போட்டியாளர்களிடையே பல கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அது மட்டுமில்லாமல் காதலும் உருவாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் பாலாஜி, ஷிவானி இடையே இருந்த கொஞ்சல்களை பார்த்தோம். இந்நிலையில் கேபி ஒருதலையாக பாலாஜியை காதலித்து வருவது நமக்கு தெரியும்.

bigg boss

இப்பொழுது இவர்களுக்குள் நடப்பவற்றை பார்த்து மிகவும் எரிச்சலடைந்துளார். தொடர்ந்து பல முகங்களை பிக் பாஸ் வீடு காட்டி வருகிறது. பாலாஜி நேரடியாக பேசுகிறேன் என்று மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார். அர்ச்சனா பாலாஜியை குழந்தை என்று ஒரு வார்த்தை சொன்னதற்காக அவ்வளவு கோவப்பட்டார்.

மேலும் சனம் மற்றும் பாலாஜி இடையே பல சச்சரவுகளும் நடந்து வந்தது. கோர்ட் டாஸ்கில் கூட பாலாஜி சனம் ஷெட்டி பலரையும் அட்ஜஸ்ட் செய்து தான் அழகி போட்டியில் கலந்துகொண்டதாக கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வனிதா நேரில் பார்த்தால் செருப்பாலேயே அடிப்பேன் என்று கண்டபடி பேசினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

bigg boss

அர்ச்சனா அவரை குழந்தை என்று கூறியதற்கே அவ்வளவு கோவப்பட்டார். ஆனால் அட்வைஸ் ஆரி, முந்திரிக்கொட்டை சனம், டிப்ளமேடிக் வேல்முருகன் என பெயர் வைத்ததே பாலாஜி தான். அவர் செய்தால் அது தப்பு இல்லையாம். ஆனால் மற்றவர்கள் செய்தால் தாப்பம். இது குறித்து ட்விட்டரில் பாலாஜி பற்றி பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here