தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டாம் – டில்லி முதல்வர் கெஜ்ரிவால் வேண்டுகோள்!!

0

ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்கள் தீபாவளிக்கு பட்டாசு விற்க, வெடிக்க தடை செய்துள்ளது. இதைப்போல, டில்லியிலும் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கூடுதல் பாதிப்பு

கொரோனா தொற்று தொழில் துறையை முடக்கியது. தற்போது, மெல்ல மீண்டு வரும் நிலையில் பட்டாசு விற்பனை சிக்கலை எதிர் கொண்டுள்ளது. பட்டாசு வெடிக்கும் போது, வெளிவரும் புகை கொரோனா நோயாளிகளுக்கு கூடுதல் பாதிப்பை தரும் என சில மாநிலங்கள் கருதுகின்றன. இதனால், ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்கள் தீபாவளிக்கு (நவம்பர் 14) பட்டாசு விற்க, வெடிக்க தடை செய்துள்ளது. இந்நிலையில், டில்லி அரசும் பட்டாசு வெடிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

காற்று மாசுபாடு

இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட ‘வீடியோ’ செய்தியில்,’ டில்லியில் கொரோனாவின் மூன்றாவது அலை, ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இருப்பினும், மக்கள் அச்சம் அடைய வேண்டாம். அரசு தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறது. இந்த, நேரத்தில் காற்று மாசுபாடு மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தீபாவளி தினத்தன்று அமைச்சர்களுடன் இணைந்து ‘டிவி சேனல்’ வழியாக உங்களுடன் இணைய உள்ளேன். தீபாவளி பண்டிகைக்கு, பட்டாசு வெடிக்க வேண்டாம். அப்படி வெடித்தால், உங்கள் குடும்பத்தினரின் வாழ்க்கையுடன் நீங்கள் விளையாடுகிறீர்கள் என அர்த்தம்,’ என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here