ஏய் .., நீ ஒரு குப்பை.., விஷ்ணுவை காண்டாக்கிய அர்ச்சனா.., கலவரமாக மாறிய பிக்பாஸ் வீடு – ப்ரோமோ இதோ!!

0
ஏய் .., நீ ஒரு குப்பை.., விஷ்ணுவை காண்டாக்கிய அர்ச்சனா.., கலவரமாக மாறிய பிக்பாஸ் வீடு - ப்ரோமோ இதோ!!
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது 55 நாட்களை கடந்து சுவாரஸ்யமாக போய் கொண்டிருக்கிறது. இன்று விஷ்ணுவுக்கும் அர்ச்சனாவுக்கு பூகம்பமே வெடித்துள்ளது. அர்ச்சனாவை கன்னத்துல அடிப்பேன் என்று விஷ்ணு கூறிய நிலையில் சண்டை உச்சத்துக்கு செல்லும் விதமாக தற்போது மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் விஷ்ணுவுக்கும் அர்ச்சனாவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. அதாவது விஷ்ணு அர்ச்சனாவை பார்த்து விளையாட இஷ்டம் இல்லை என்றால் கேட்டை எகிறி குதித்து ஓடிடு என்று கூறுகிறார்.
அதற்கு அர்ச்சனா நான் ஏன் போகணும் நீயே தண்டத்துக்கு இருக்கிற என்று கூறுகிறார். இதற்கு ஆத்திரம் அடைந்த விஷ்ணு, நீ தான் தண்டம், வேஸ்ட் பீஸு நீ என்று கத்துகிறார். உடனே அர்ச்சனா நான் வேஸ்ட் பீஸுனா அருகில் இருந்த குப்பைத் தொட்டியை காண்பித்து நீ தான் இது என்று கூறுகிறார். தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில் விஷ்ணு போ போய் போர்வையை பொத்தி அழுகு என்று கூற,அதற்கு இனிமேல் நான் அழுகுறேனான்னு பார்க்கலாம் என்று அர்ச்சனா கூறும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here