பிக்பாஸ் வீட்டில் இருந்து எஸ்கேப்பாக பார்த்த முக்கிய போட்டியாளர்? இந்த வாரம் எலிமினேட் இவர் தானா? வீடியோ இதோ!!!

0
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7க்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் நிறைய மாற்றங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. குறிப்பாக ஒரு போட்டியாளர் வெளியேற புதிய போட்டியாளர் என்ட்ரி கொடுக்க என கிட்டத்தட்ட 70 நாட்கள் கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் முதல் சீசனில் நடந்த சம்பவம் ஒன்று இந்த சீசனில் நடைபெற்றுள்ளது.
அதாவது பிக்பாஸ் சீசன் 7ல் முக்கிய போட்டியாளராக இருந்து வரும் கூல் சுரேஷ் வீட்டை விட்டு எகிறி குதிக்க முயற்சி செய்துள்ளார். முதல் சீசனில் பரணி வீட்டை விட்டு குதிக்க முயன்றது போல், தற்போது கூல் சுரேஷ் செய்துள்ளார். இது விதி மீறல்களில் ஒன்று என்பதால் இந்த வாரம் கூல் சுரேஷ் தான் எலிமினேட் ஆக போகிறார் என்று தெரிய வருகிறது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here