பிக் பாஸ் ஜூலியின் மறுபக்கத்தை பார்த்து வியந்த ரசிகர்கள்… குவியும் பாராட்டுக்கள்!!!

0

பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சி மூலம் அறியப்பட்டவர் ஜூலி. இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதாவது சூர்யாவின் காக்க காக்க படத்தில் இடம்பெற்ற ஒரு பேமஸ் பாடலை தனது சொந்தக் குரலில் பாடி உள்ளார். அவரின் இந்த திறமை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போய் உள்ளனர்.

ஜூலி உயிர் காக்கும் மருத்துவ துறையில் ஒரு செவிலியராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார். அந்த பின்னர் 2017 ஆம் ஆண்டு மெரினாவில் பெரிய போராட்டமாக வெடித்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில்  தனது பல கருத்துக்களை வெளிப்படையாகவும் துணிச்சலோடு வெளிப்படுத்தி ஒரு சிங்க பெண்ணாக மக்கள் மத்தியில் அறியப்பட்டார். அதன் விளைவாக கிடைத்தது தான் பிக் பாஸ் நிகழ்ச்சி.

அங்கு அவரின் பல வேண்டாத செய்கைகளால் அந்த நிகழ்ச்சியில் கடைசி வரை நீடிக்க முடியவில்லை. சில வாரங்களிலேயே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு அவரை  நோக்கி  பல சர்ச்சை பேச்சுக்கள் எழுந்தன. மேலும் இவர் பலரின் கோபத்திற்கும், கேலிக்கும் கிண்டலுக்கு ஆளானார். இருப்பினும் அவை அனைத்தையும் தூசி தட்டி விட்டு தனது கேரியரில் முன்னேற ஆரம்பித்தார்.

மீண்டும் கண்ணனை சேர்த்து கொண்ட முல்லை, தனம்… அட பாவிங்களா இது எப்போ!!! 

அதன்படி இவர் மன்னர் வகையறா, அம்மன் தாயி, தப்பாட்டம் போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மேலும்  தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்து உள்ளார். அந்த வகையில் தற்போது சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்த காக்க காக்க படத்தின் ஒன்றா இரண்டா ஆசைகள்…என தொடங்கும் பாடலுக்கு  தனது இனிமையான குரலால் பாடி அசத்தி உள்ளார். அவரின் இந்த திறமையை பார்த்து வியந்த ரசிகர்கள் அவருக்கு சில அட்வைஸ் வழங்கி அவரை பாராட்டி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Julee (@mariajuliana_official)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here