கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை கலந்து ஆய்வு – முடிவை எதிர்பார்த்து இந்திய மக்கள்!!

0

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்துகளை சேர்த்து பயன்படுத்தி ஆய்வு செய்ய இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் அனுமதி அளித்துள்ளார்.

தற்போது உள்ள கொரோனா சூழலில் அனைத்து நாடுகளின் மக்களும் தங்கள் உயிரை பாதுகாத்து கொள்ள தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கே அலை மோதுகின்றனர். ஒவ்வொரு நாட்டு அரசும் தங்களின் மக்களை காப்பாற்ற தடுப்பூசியில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் (ICMR) கொரோனா தடுப்பூசி தொடர்பான ஒரு ஆய்வை நடத்தியது. அதன் முடிவில் இருவேறு வகையான கொரோனா தடுப்பூசிகளை ஒருவர் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என தெரிவித்தது.

37 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு!!!

எனவே அதை தொடர்ந்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் வேணுகோபால், கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகளை சேர்த்து பயன்படுத்தி ஆய்வு செய்ய தற்போது அனுமதி அளித்துள்ளார். இந்த ஆய்வின் முடிவுகள் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் ஒரு முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here