விஜய் டிவியின் வெற்றி சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா, காவ்யா மற்றும் சரவண விக்ரம் ஆகியோர் இணைந்து ஒரு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளனர்.
கூட்டு குடும்பத்தின் கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்ட்ரோஸ். இதில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், குமரன், ஹேமா, சரவணன் விக்ரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் தற்போதைய கதையாக வீட்டின் கடைக்குட்டி கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா ரகசிய திருமணம் செய்து கொண்டு உள்ளனர். இதனால் பாண்டியன் ஸ்டோர் வீட்டில் ஒரு சூறாவளி வீசி வருகிறது. இதையடுத்து வீடு மிகுந்த வேதனையில் இருக்கிறது.
இந்நிலையில் இந்த சீரியல் குழு ஷூட்டிங் இல்லாத நேரத்தில் செய்யும் ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் இன்ஸ்டா புகைப்படங்கள் மக்கள் மத்தியில் பேமஸான ஒன்று. அந்த வகையில் தற்போது கண்ணன், முல்லை மற்றும் தனம் ஆகிய மூவரும் இணைந்து ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை ஷேர் செய்து உள்ளனர். இந்த வீடியோ ஏராளமான லைக்ஸ்களை பெற்று வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்