‘என் அச்சம் ஆசை எல்லாமே தள்ளிபோகட்டும்’ – லேடி சூப்பர் ஸ்டார் பாடலுக்கு ரீல்ஸ் செய்த பிக் பாஸ் ஜூலி!!!

0
பிக் பாஸ் புகழ் ஜூலியா இது.. அவரின் லேட்டஸ்ட் போட்டோ - அதுவும் யாருடன் எடுத்துள்ளார் பாருங்க!

மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு வீர தமிழச்சியாக மக்கள் மனதில் அமர்ந்தவர் ஜூலி. தற்போது அவர் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு   ரீல்ஸ்   செய்து விடியோவை பகிர்ந்து உள்ளார்.

ஜல்லிக்கட்டு மூலம் பரிச்சியமான ஜூலி அதன் மூலமாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழையவும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு ஆரம்பத்தில் அமைதியாக பொறுமையாக இருந்து மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றார். அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சுயரூபம் வெளிப்பட்டது. அவரின் சில செய்கைகள் மூலம் அவரின் மீதான நல்ல அபிப்பிராயத்தை இழக்க வைத்தது. மேலும் அவர் அந்த போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அதன் பின் ஒரு சில படங்களில் நடித்து நடிகையாகவும் மாறியுள்ளார். இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒரு தரப்பினர் ரசித்து புகழ்ந்தாலும், மற்றொரு தரப்பினரும் இன்னும் அவரை திட்டி தான் வருகின்றனர். இந்நிலையில் தற்போது அவர் ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘நானும் ரவுடிதான்’ படத்தில் வரும் நீயும் நானும் என தொடங்கும் பாடலில் ‘அச்சம் ஆசை எல்லாமே தள்ளிபோகட்டும்’ என்ற வரிகளுக்கு    ரீல்ஸ்   செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Julee (@mariajuliana_official)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here