வெயில்ல வெளிய சுத்தாத.. வீட்டுக்கு போ.. பசு மாட்டுக்கு அட்வைஸ் செய்த விஜய் டிவி புகழ்!!!

0

விஜய் டிவியின் குக் வித் கோமாளி பிரபலம் புகழ், பசு மாட்டுக்கு வாழை பழம் கொடுத்து அதனை அது வீட்டுக்கு போகும் படி அட்வைஸ் செய்த விடியோவை அவர் இன்ஸ்டா பக்கத்தில் நகைச்சுவையாக பகிர்ந்துள்ளார்.

புகழ், இவர் 2016-ஆம் ஆண்டு விஜய் டிவி-யில் ஒளிபரப்பான “சிரிப்புடா” என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். ஆனால் அந்த அளவுக்கு பெயர் அந்நிகழ்ச்சியில் அவருக்கு கிடைக்கவில்லை. பின்னர் அதே விஜய் டிவியில் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் பங்கேற்றார். தனது வேடிக்கையான பேச்சால் தமிழக மக்கள் மனதை கவர்ந்தார். அது வரை அவருக்கு கிடைக்காத பெயரும் புகழும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அவருக்கு கிடைத்தது.

 

தனது எதார்த்தமான பேச்சு, டைமிங் சென்ஸ், பாடி லாங்குவேஜ் என பெரும் ரசிகர் பட்டாளத்தை புகழ் உருவாக்கியுள்ளார். மேலும் இன்ஸ்டாகிராம்மில் இவரை 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர். புகழ் தற்போது தமிழ் திரையுலகிலும் கால் பதித்துள்ளார். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் தனது வீட்டிற்கு முன் வந்த பசுமாட்டிற்கு வாழை பழம் கொடுத்து அதை வெயில் அதிகம் உள்ளது. எனவே நீ வீட்டுக்கு போ என்று அட்வைஸ் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ வெளியான ஒரு நாளுக்குள் 8 லட்சம் பார்வைகளை தாண்டி சென்றுள்ளது. அந்த விடியோவை இங்கே பார்க்கலாம்.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here