தன் குழந்தை என்றே தெரியாமல் லட்சுமி பாசத்தில் மயங்கும் பாரதி – சௌந்தர்யாவின் எண்ணம் நிறைவேறுமா??

0

பொது அறிவுகளுக்கான கேள்வியில் பங்குபெறும் போட்டியாளர்களில் சரவணன் மற்றும் சந்தியா முதலிடத்தை பிடிக்க, சௌந்தர்யா மற்றும் கண்ணம்மா இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

மெகா சங்கமம்

இன்றைய மெகா சங்கமம் எபிசோடில் லட்சுமியை பார்ப்பதற்காக கண்ணம்மா ரூமுக்கு வருகிறார் சௌந்தர்யா. துர்கா தேவியாக நடித்த கண்ணம்மா நன்றாக நடித்ததாக பாராட்டுகிறார் சௌந்தர்யா. நீ அந்த கேரக்டரில் நடிக்கும் போது பாரதிய தானே நெனச்ச என சௌந்தர்யா கேட்க, அதனை மறுக்கிறார் கண்ணம்மா.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவ்வாறு பேசிக்கொண்டே இருந்த சௌந்தர்யா அப்படியே உறங்கி விட, அவருக்கு கால் பிடித்து விடுகிறார் கண்ணம்மா. அடுத்த நாள் விடிந்ததும், ஸ்விமிங் பூலில் இருந்த லட்சுமியை பார்த்த பாரதி அவரிடம் பேசுகிறார். நான் எங்க போனாலும் நீ என்னவே பாலோ பண்ற, உங்க அம்மா எப்படி இருக்காங்க என கேட்க, என் அம்மா நல்லா இருக்காங்க என லட்சுமி கூறுகிறார்.

பின்பு லட்சுமிக்கு ஸ்விம்மிங் கற்றுத்தருகிறார் பாரதி. இதை பார்க்கும் சௌந்தர்யா சந்தோசப்படுகிறார். பிறகு வெண்பாவும், பார்வதியும் நேற்று நடந்த போட்டியை பற்றிப்பேசுகிறார்கள். சந்தியாவை போட்டியில் தோற்கடிக்க எதாவது செய்யணும் என பார்வதி கேட்கிறார்.

அப்போது போட்டியில் கேட்கப்படும் கேள்விகள் அடங்கிய பைலை வெண்பாவும் பார்வதியும் திட்டமிட்டு திருடுகிறார்கள். கராத்தே கிளாஸ் செல்லும் லட்சுமியை பார்க்கும் பாரதி அவருடன் விளையாடிக்கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் வெண்பா, நீ ஒரு டாக்டர் இப்படி சின்ன பொண்ணு கூட விளையாடிட்டு இருக்க என கேட்க, கொஞ்சம் ஜாலியா இருக்க விடு வெண்பா என பாரதி சொல்லுகிறார்.

கராத்தே சண்டை போடலாம் என வெண்பா லட்சுமியை வம்பிழுக்க அந்த சின்ன பெண்ணின் கையில் குத்து வாங்குகிறார் வெண்பா. பிறகு சந்தியாவின் பையில் அந்த கேள்விகள் அடங்கிய பைலை வைக்கிறார் பார்வதி. பின்பாக போட்டி துவங்குகிறது. அடுத்த போட்டியில் கலந்து கொள்ள அனைத்து ஜோடிகளும் மேடைக்கு செல்கிறார்கள்.

போட்டியில் கேட்கப்பட்ட எல்லா பொது அறிவு கேள்விகளுக்கும் டார்ச் லைட் அடித்து பதில் சொல்லுகிறார் சந்தியா. இந்த போட்டியின் தொடர்ச்சியாக டம்ப் சரேட் போட்டி நடக்கிறது. அதிலும் சந்தியா மற்றும் கண்ணம்மா ஜோடி வெற்றி பெறுகிறார்கள். இந்த போட்டியின் முடிவில் முதலிடத்தை பிடிக்கிறார்கள் சரவணன் மற்றும் சந்தியா. அடுத்ததாக நடக்கப்போகும் சமையல் போட்டியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து கோமாளிகள் வரப்போவதாக அறிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here