ஸ்பைசியான “பிஷ் பால்ஸ்” ரெசிபி – வீட்டில செஞ்சு அசத்துங்க!!

0

அசைவ பிரியர்களுக்கு என்றுமே மீன் என்றால் தனி பிரியம் தான். மீன் சமைப்பது கடினம் தான் என்றாலும், பொறுமையாக செய்தால் அருமையாக இருக்கும். அந்த வகையில் இன்று “பிஷ் பால்ஸ்” ரெசிபி எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்..!!

தேவையான பொருட்கள்

மீன் சமைக்க
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • உப்பு – 1 டீஸ்பூன்
  • வஞ்சரம் மீன் – 250 கிராம்
பிஷ் பால்ஸ் செய்ய
  • எண்ணெய் – தேவையான அளவு
  • பூண்டு – 1 டீஸ்பூன் (நறுக்கியது)
  • இஞ்சி – 1 டீஸ்பூன் (நறுக்கியது)
  • வெங்காயம் – 1 (நறுக்கியது)
  • சில்லி பிளெக்ஸ் – 1 டீஸ்பூன்
  • மிளகு – 2 டீஸ்பூன்
  • உருளைக்கிழங்கு – 1 (வேகவைத்தது)
  • சோள மாவு – 2 டீஸ்பூன்
  • பிரட் துகள்கள் – 2 டீஸ்பூன்

செய்முறை

முதலில், ஒரு வாணலியில் 1 கப் தண்ணீர் சேர்த்து, அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இதில் மீன் துண்டுகளை கலக்கவும். பின்பு, இதனை கொதிக்க விட வேண்டும். 10 நிமிடங்களுக்கு பிறகு அதனை தனியாக எடுத்து மீனில் உள்ள முட்களை அகற்ற வேண்டும். அதன் பிபி, ஒரு சட்டியில் எண்ணெயை சூடாக்கி அதில் பூண்டு, இஞ்சி மற்றும் வெங்காயம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

இந்தியாவில் 50 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்!!

பிறகு வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் அதில் மீன் துண்டுகளை சேர்க்க வேண்டும். இதில் சில்லி பிளெக்ஸ், உப்பு, மிளகு பொடி ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இத்துடன் இதில் வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் கொத்தமல்லியினை சேர்க்க வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்போது ஒரு பாத்திரத்தில் சோள மாவினை எடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்கி வைத்து கொள்ளவும். அதே போல் இன்னொரு பாத்திரத்தில் பிரட் துகள்களை எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

நாம் செய்து வைத்திருந்த மீன் கலவையினை எடுத்து சிறிய உருண்டைகளாக பிடித்து சோள மாவு மற்றும் பிரட் துகள்களுடன் எடுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி அதில் இந்த உருண்டைகளை போட்டு பொறிக்க வேண்டும்.

இதனை மயோனைஸ் அல்லது கெட்சப் உடன் பரிமாறலாம். அவ்ளோ தான்..!!

                                சூடான & டேஸ்டியான “பிஷ் பால்ஸ்” ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here