திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் பதவிக்கு ஆசைப்படும் பாக்கியராஜ் – நாளை வேட்பு மனு தாக்கல்!!

0

தற்போது திரைப்பட இயக்குனர் சங்க தலைவராக இருக்கும் ஆர்.கே.செல்வமணியின் பதவி காலம் முடிவதால் வரும் ஜனவரி 23 ஆம் தேதியில் இதற்கான தேர்தலை நடத்த உள்ளனர். இந்த வருடம் தலைவர் பதவிக்கு பாக்கியராஜ் போட்டியிடவுள்ளார்.

இயக்குனர் சங்க தலைவர்:

அரசு தரப்பில் தேர்தலை நடத்தி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறந்த கட்சி தலைவர்களை தேர்ந்தெடுப்பது வழக்கம். அதே போல் திரைத்துறையிலும் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தி அரசு இயக்குனர் சங்க தலைவர்கள், செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர்கள், இணை செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு தகுந்தவர்களை தேர்ந்தெடுத்து வருகின்றனர்.

சென்ற சங்க தேர்தலின் போட்டியில் ஆர்.கே.செல்வமணி வெற்றி பெற்று இயக்குனர் சங்க தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த வருடம் இயக்குனர் சங்க தலைவர் பதவிக்கு பாக்கியராஜ் போட்டியிடவுள்ளார். ஏற்கனவே பாக்கியராஜ் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக உள்ளார். தற்போது இந்த பதவிக்கும் போட்டியிட தயாராக உள்ளார். இந்த தேர்தல் ஜனவரி 23-ந் தேதி சென்னை வடபழனியில் உள்ள இசைக்கலைஞர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்கவுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here