விஜயின் ‘தளபதி 69’ படத்திலிருந்து பின் வாங்கிய தயாரிப்பு நிறுவனம்.. புதிய தயாரிப்பாளர் யார்?? முழு விவரம் உள்ளே!!

0
தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது ஒரு புறம் இருந்தாலும் அவர் அடுத்து நடிக்க இருக்கும் தளபதி 69 படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
முன்னதாக விஜயின் ‘தளபதி 69’ படத்தை  DVV என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள்  வெளிவந்தன. ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இப்படத்திலிருந்து அந்த தயாரிப்பு நிறுவனம் விலகி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சன் பிக்சர்ஸ் அல்லது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களில் ஏதேனும் ஒரு நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here