விஜயின் “GOAT” படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வெங்கட் பிரபு. தற்போது இவர் இயக்கத்தில் GOAT திரைப்படம் உருவாகி வருகிறது. விஜய் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் அவருடன் இணைந்து சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த்  உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் GOAT படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது ‘GOAT’ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியாக இருப்பதை போஸ்டர் மூலம் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இத்திரைப்படத்தின் முதல் பாடல் வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரம்ஜான் பண்டிகை எதிரொலி: SWIGGY வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்!!

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here