ரயில்களில் புகை பிடிப்பது, பிச்சை எடுப்பது தண்டனைக்குரிய குற்றமல்ல – மத்திய அரசு புதிய சட்டத்திருத்தம்??

0

ரயில் நிலையங்களிலோ, பயணத்தின் போதோ புகை பிடிப்பது மற்றும் பிச்சை எடுப்பது ஆகிய செயல்கள் தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது. இதற்காக அபராதம் விதிக்கப்படுவதுடன் சிறைத்தண்டனையும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இதற்கான சட்டத்தில் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துளளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்திய ரயில்வே:

உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்ஒர்க் இந்தியாவில் தான் உள்ளது. ஒருபுறம் சகல வசதிகளுடன் வசதி படைத்தவர்களுக்கு ரயில் சேவைகள் இருந்தாலும், சாமானிய மனிதன் பயணிக்கும் ரயிலில் கழிவறை கூட சுத்தமாக இருப்பதில்லை. இதற்கிடையில் ரயில்களில் பிச்சை எடுப்பவர்கள் மற்றும் புகை பிடிப்பவர்கள் தொல்லை மிக அதிகம். இந்திய ரயில்வே சட்டத்தின் படி, ரயில்களில் பிச்சை எடுப்பவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம், ஒரு ஆண்டு சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படுகிறது. மேலும் புகை பிடிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் இரண்டு குற்றங்களுக்கும் தண்டனை சட்டங்களில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து பயணிகளிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் பிச்சை எடுப்பவர்கள், புகை பிடிப்பவர்களை அரசே ஊக்குவிப்பது போன்று உள்ளதாக பலரும் கூறி வரும் நிலையில் அது அரசின் நோக்கம் அல்ல என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

நாய்களை பராமரிக்க பட்டதாரிகள் தேவை, ரூ. 45 ஆயிரம் சம்பளம் – டெல்லி ஐஐடி அறிவிப்பால் சர்ச்சை!!

மேலும் இத்தகைய குற்றங்களுக்கு சிறை தண்டனை, வழக்குப்பதிவு உள்ளிட்டவை விதிக்கப்படாமல் இருந்தாலும், ரயில் பயணத்தின் போதோ அல்லது நிலையங்களிலோ பிச்சை எடுக்கவோ, புகை பிடிக்கவோ யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. புகை பிடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமே தவிர சிறைத்தண்டனை விதிக்கப்படாது.

மத்திய அரசின் இந்த முடிவு குறித்து உங்களது கருத்துகளை கமெண்ட் பாக்சில் சொல்லுங்க மக்களே…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here