நடிகை திரிஷாவை வம்பிழுத்த பிரபல பத்திரிகையாளர்.., பேட்டியில் உண்மையை உடைத்த சம்பவம்!!

0
நடிகை திரிஷாவை வம்பிழுத்த பிரபல பத்திரிகையாளர்.., பேட்டியில் உண்மையை உடைத்த சம்பவம்!!
நடிகை திரிஷாவை வம்பிழுத்த பிரபல பத்திரிகையாளர்.., பேட்டியில் உண்மையை உடைத்த சம்பவம்!!

நடிகை திரிஷாவின் திருமண வாழ்க்கை குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.

நடிகை திரிஷா:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்து வருபவர் தான் நடிகை திரிஷா. சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார் திரிஷா. இப்படத்தின் மூலம் மீண்டும் அவருடைய சினிமா மார்க்கெட் உயர்ந்துள்ளது. தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இப்படி பிஸியாக நடித்து வரும் திரிஷா தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் இவர் திருமணம் செய்து கொள்ளாதது குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ஒரு வீடியோவில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த வீடியோவில் கூறியதாவது, இதற்கு முன்னர் தயாரிப்பாளர் வருண் மணியன் மற்றும் நடிகர் ராணாவை காதலித்து திருமணம் அளவிற்கு சென்று நின்று போனது. அதன் பின்னர் நடிகர் சிம்புவுடன் காதல் வயப்பட்டு, அந்தக் காதலும் நிலைகுலைந்து போனது.

கார்த்திக் ராஜ் புதிய சீரியலின் லேட்டஸ்ட் அப்டேட் லீக் – சேனல் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இப்படி அடுத்தடுத்த காதல் முறிவு ஏற்பட்டதால், தனது திருமணமும் கடைசியில் முறிந்து போகிவிடும் என்ற பயத்தில் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார் என்று பயில்வான் தெரிவித்துள்ளார். மேலும் திரிஷாவை திருமணம் செய்து கொள்ள போகும் ஆண்மகன் அவரை சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று சொல்ல வாய்ப்பு இருப்பதால் திருமண வாழ்க்கையை தள்ளிப் போட்டுக் கொண்டு செல்கிறார் என்று பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here