ஒரே ஆண்டில் 1500 ரன்கள்…, 2வது இந்தியரானார் சூர்யகுமார்…, அப்போ முதலே இருக்குறது யாரு??

0
ஒரே ஆண்டில் 1500 ரன்கள்..., 2வது இந்தியரானார் சூர்யகுமார்..., அப்போ முதலே இருக்குறது யாரு??
ஒரே ஆண்டில் 1500 ரன்கள்..., 2வது இந்தியரானார் சூர்யகுமார்..., அப்போ முதலே இருக்குறது யாரு??

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் சூர்யகுமார் 13 ரன்களை எடுத்திருந்தாலும், விராட் கோஹ்லியின் சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார்.

சூர்யகுமார் யாதவ்:

இந்திய அணி கடந்த 18ம் தேதி முதல் நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடியது. இந்த தொடரின், முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டதையடுத்து, 2வது போட்டியை இந்திய அணி சூர்யகுமாரின் அதிரடியால் வென்றது. இந்த போட்டியில், சூர்யகுமார் யாதவ், 51 பந்தில் 11 பவுண்டரி 7 சிக்ஸர் 111 ரன்களை அடித்திருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் மூலம், ஒரே ஆண்டில், டி20 போட்டியில் 2 சதங்களை அடித்து, ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்தார். இதையடுத்து, இன்று நடைபெற பெற்ற, நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இவர், 13 ரன்களில் வெளியேறினாலும், விராட் கோஹ்லி சாதனையை சமன் செய்து விட்டு தான் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.

IND vs NZ T20: தொடரை வென்ற இந்தியா…, DLS முறையால் டையான 3 வது போட்டி!!

அதாவது, டி20 போட்டிகளில் ஒரே ஆண்டில், 1500 ரன்களை கடந்து சூர்யகுமார் யாதவ் இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமை அடைந்தார். இதற்கு முன் விராட் கோஹ்லி இந்த சாதனை படைத்து முதல் இந்தியர் என்ற பெருமை தட்டிச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யகுமார் யாதவ் இதுவரை சர்வதேச அளவில் 41 டி20 போட்டிகளில் 1519 ரன்களை அடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here