இந்த முக்கிய சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்த ஆலியா மானசா.., எல்லாரையும் இப்படி அழ வச்சுடீங்களே!!

0
இந்த முக்கிய சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்த ஆலியா மானசா.., எல்லாரையும் இப்படி அழ வச்சுடீங்களே!!
இந்த முக்கிய சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்த ஆலியா மானசா.., எல்லாரையும் இப்படி அழ வச்சுடீங்களே!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க ரெடி ஆகி விட்டார். அதுவும் பாரதிக்கு கண்ணம்மா மேல் இருந்த சந்தேகம் கொஞ்சம் கூட குறையவே இல்லை. அதே திமிரும் குறையாமல் தான் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க ஒத்துக்கொள்கிறார்.

இன்னொரு பக்கம் வெண்பா திருமணம் செய்ய போகும் ரோஹித் பற்றிய உண்மையும் வெண்பாவின் அம்மாவிற்கு தெரிய வருகிறது. இதனால் ரோஹித்தை கன்னத்தில் அரைந்து இப்படி ஏமாத்திட்டியே டா பாவி என்று சொல்லி திருமணத்தை கேன்சல் செய்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க போகும் பாரதி ஹேமாவிற்கும் எனக்கும் டிஎன்ஏ ஒத்துப்போகவில்லை என்றால் வெண்பா கழுத்தில் தாலி கட்டிவிடலாம் என்று யோசிக்கிறார். மேலும் ஒரு திருப்பமாக ஆலியா இந்த ப்ரோமோவில் இணைந்துள்ளார். அதாவது ஹேமா கதாபாத்திரத்தில் நடித்த ஆலியா விபத்தில் இறந்து விடுவது போல கட்டப்பட்டது.

மேலும் ஹேமாவிற்கு ஆலியாவின் புகைப்படத்தை காட்டி இதுதான் உன் அம்மா என்று கூட சொல்லி இருப்பார். இப்படி இருக்க இப்பொழுது ஹேமா அந்த வீட்டிற்கு செல்ல அப்பொழுது ஆலியாவின் புகைப்படத்தை பார்த்து இதுதானே என்னோட அம்மானு அப்பா காட்டுனாரு, அப்போ எங்க அம்மா இறந்துட்டாங்களா?? என்று கதறி அழுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here